சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமத்தில் ஒட்டுநர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே 8 ஆம் வகுப்பு படித்திருந்தால் உடனடியாக இப்பணிக்கு விண்ணப்பித்துக்கொள்ளலாம்.


CMDA எனப்படும் சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமத்தில் காலியாக உள்ள 25 ஓட்டுநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், இதற்கான தகுதி? தேர்வு செய்யப்படும் நடைமுறைக்குறித்து தற்போது இங்கே தெரிந்துக்கொள்வோம்.


CMDA வில் ஓட்டுநர் பணிக்கானத் தகுதிகள்:


கல்வித்தகுதி :  இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 8 ஆம் வகுப்பு தேர்ச்சிப்பெற்றிருக்க வேண்டும்.


இதோடு ஒட்டுநர் பணி என்பதால், LMV ஒட்டுநர் உரிமம், மோட்டார் வாகன விதிகளின்படி  தகுதியான அதிகாரி அளித்துள்ள உரிமம் பெற்றிருக்க வேண்டும். இதோடு குறைந்தது 2 ஆண்டு ஓட்டுநர் முன்அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் முதலுதவி பயிற்சி சான்றிதழ் மற்றும் உடல் தகுதிக்கான மருத்துவச் சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


வயது வரம்பு :  சென்னை பெருநகர் வளர்ச்சிக்குழுமத்தில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் 18 வயது முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். ஆனாலும் SC/SCA/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 2 ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளது.





விண்ணப்பிக்கும் முறை:


 எனவே மேற்கண்ட தகுதியும், ஆர்வமும் உள்ள நபர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க வேண்டும் எனில் http://www.cmdachennai.gov.in/ என்ற இணையதள முகவரியின் வாயிலான ஆன்லைன் மூலம் வருகின்ற அக்டோபர் 27 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். நேரடியாகவோ அல்லது தபால் மூலமாக கொடுக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.


இதோடு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் தேவையானத் தகுதி சான்றிதழ்கள், விண்ணப்பதாரரின் புகைப்படம் (Recent Passport size photo) மற்றும் கையொப்பம் ஆகியவற்றைத் தவறாமல் பதிவேற்றம் செய்தல் வேண்டும். ஆனால் குறைகளுடன் உள்ள விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.


OC / BC / BC (M) / MBC & DNC பிரிவைச் சேர்ந்தவர்கள், ரூ.300/- மற்றும் SC / ST பிரிவைச் சேர்ந்தவர்கள், ரூ.150/-ம் விண்ணப்பக் கட்டணம் இணையதளத்தில் விண்ணப்பிக்கும் போது Online மூலமாக மட்டுமே செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகுதியில்லாத மற்றும் விண்ணப்பக் கட்டணம் முறையாக செலுத்தாமல் வரும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் பரிசீலிக்கப்பட மாட்டாது. இதோடு விண்ணப்பதாரர் தனது இருப்பிடச் சான்று குறித்து ஆதார் அட்டை அல்லது குடும்ப அட்டை அல்லது வாக்காளர் அட்டை எதேனும் ஒன்றை பதிவேற்றம் செய்ய வேண்டும்,


தேர்வு செய்யும் முறை:


சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமத்தில் ஒட்டுநர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு ஓட்டுநர் திறனறித்தேர்வு மற்றும் வாகனப்பராமரிப்பு குறித்த செய்முறைத்தேர்வு நடத்தப்படும். இதன் அடிப்படையில் தான் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.


சம்பளம் – இப்பணியிடங்களுக்கு மாதம் ரூபாய் 19,500 முதல் 62 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


மேலும் இதுக்குறித்த கூடுதல் விபரங்களை https://cmdadirectrecruitment.in/ என்ற இணையதளம் வாயிலாக தெரிந்துக்கொள்ளலாம்.