பேங்க் ஆஃப் இந்தியாவில் காலியாக உள்ள faculty, Counselor, office assistant, watchman ஆகிய பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஆர்வமும், தகுதியும் உள்ள நபர்கள் அக்டோபர் 25 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக்கொள்ளவும்.


மும்பையை தலைமையிடமாகக் கொண்டு பேங்க் ஆஃப் இந்தியா வங்கி செயல்பட்டுவருகிறது. கடந்த 1969 ஆம் ஆண்டு முதல் நாட்டுடமையாக்கப்பட்ட இந்த வங்கி இந்தியாவின் நான்காவது மிகப்பெரிய வங்கியாக உள்ளது. வெளிநாடு உள்பட இந்தியா முழுவதும் பல்வேறு கிளைகளுடன் செயல்பட்டுவரக்கூடிய இவ்வங்கியில் பல்வேறு பிரிவுகளின் கீழ் பலர் பணியாற்றிவருகின்றனர். இந்நிலையில் தற்போது இவ்வங்கியில் faculty, Counselor, office assistant, watchman ஆகிய பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கான தகுதி, விண்ணப்பிக்கும் முறை குறித்து இங்கே தெரிந்துக்கொள்வோம்.





பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் faculty ஆவதற்கானத் தகுதிகள்:


கல்வித்தகுதி : Graduation, Diploma தேர்ச்சியுடன் house faculty or visiting faculty and shall possess good flair/computing skills/knowledge in computer பணிகளில் 2 ஆண்டுகள் வரை முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


வயது வரம்பு : விண்ணப்பதாரர்கள் 23 வயது முதல் 63 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.


பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் Counselor பணிக்கானத் தகுதிகள்:


கல்வித்தகுதி :Graduate/ Post Graduate degree தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.


வயது வரம்பு: 23 வயது முதல் 63 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.


பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் office assistant பணிக்கானத் தகுதிகள்


கல்வித்தகுதி : Graduate தேர்ச்சியுடன் Basic knowledge of Computer திறன் கொண்டிருக்க வேண்டும்.


 வயது வரம்பு : விண்ணப்பதார்கள் 18 வயது முதல் 43 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.


 பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் watchman & Gardener பணிக்கானத் தகுதிகள்


கல்வித்தகுதி :8ம் வகுப்புத் தேர்ச்சியுடன் agriculture/ gardening/ horticulture பணிகளில் அனுபவம் இருக்க வேண்டும்.


வயது வரம்பு : விண்ணப்பதாரர்கள் குறைந்த பட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 63 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.


விண்ணப்பிக்கும் முறை:


எனவே மேற்கண்ட தகுதியும், ஆர்வமும் உள்ள நபர்கள் https://bankofindia.co.in/ என்ற இணையதளப்பக்கத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து வருகின்ற அக்டோபர் 25 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.


தேர்வு முறை: இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்த விண்ணப்பதார்களுக்கு எழுத்து மற்றும் நேர்முகத்தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


சம்பளம் – மேற்கண்ட பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியானவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.5,000/- முதல் அதிகபட்சம் ரூ.20,000/- வரை என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


மேலும் இப்பணிக்குறித்த கூடுதல் விபரங்களை https://bankofindia.co.in/pdf/Indore_FLC.PDF அல்லது https://bankofindia.co.in/pdf/Advertisement_merged.pdf என்ற இணையதளப்பக்கத்தின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.