பிரபல தனியார் வங்கியான ஐ.டி.பி.ஐ. -யில் ( IDBI Bank ) உள்ள பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலம் 1036 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் பற்றி காணலாம்.

பணி விவரம்

 Executives (on contract) 2023-24

மொத்த பணியிடங்கள் - 1036 (பணியிட எண்ணிக்கை மாறுதலுக்கு உட்பட்டது என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.)

கல்வித்தகுதி: 

மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு துறையில் பட்டம் (பட்டப்படிப்பு) பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு 

இதற்கு விண்ணப்பிக்க 20 வயது பூர்த்தியடைந்தவராகவும் 25 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். 

பணி இடம்:

இதற்கு தேர்ந்தெடுக்கப்படுவர்கள் நாடு முழுவதும் உள்ள வங்கியின் அலுலகத்தில் நியமிக்கப்படுவர்.

பணி காலம்:

இந்த பணி முற்றிலும் ஒப்பந்தம் அடிப்படையிலானது. முதலில் ஓராண்டிற்கு பணி ஒப்பந்தம் செய்யப்படும். பணி திறன் அடிப்படையில் ஒப்பந்தம் மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும். மூன்றாண்டுகள் பணி திறன் அடிப்படையில் க்ரேட் -ஏ உதவி மேலாளர் பணிக்கு விண்ணப்பிக்க தகுதி பெறுவர். வங்கியின் வேலைவாய்ப்பு நடைமுறைகளின் அடிப்படையில் இந்த பணிக்கு நேர்காணல் நடத்தப்படும். 

ஊதிய விவரம்:

முதல் ஆண்டு - ரூ.29,000

இரண்டு ஆண்டு - ரூ.31,000

மூன்றாம் ஆண்டு - ரூ.34,000

தேர்வு செய்யப்படும் முறை:

இந்தப் பணிகளுக்கு எழுத்துத் தேர்வு, மற்றும் நேர்முக தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். 

எழுத்துத் தேர்வு பாடத்திட்டம்

இந்த தேர்விற்கு இந்தி, மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளில் தேர்வு எழுதலாம்.

 

விண்ணப்பிக்கும்  முறை: 

இதற்கு ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். https://www.idbibank.in/- என்ற லிங்கி கிள்க் செய்யவும்.

விண்ணப்பிக்கும் வழிமுறைகள்: 

  • முதலில் https://www.idbibank.in/pdf/careers/Detailed-Advertisement-Executive-On-Contract-2023-24.pdf -என்ற இணைப்பில் பணி குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ளவும். 
  • https://www.idbibank.in/- என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
  • பின்னர், “CAREERS/CURRENT OPENINGS” என்பதை க்ளிக் செய்யவும்.
  • “Recruitment ofExecutive (On contract) 2023-24” பக்கத்திற்கு செல்லவும். 
  • “APPLY ONLINE” என்பதை க்ளிக் செய்யவும்.
  • பின் விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்ட தகவல்களை சரியாக பூர்த்தி செய்யவும்.

மேலும் கூடுதல் விவரங்களுக்கு.. https://www.idbibank.in/pdf/careers/Detailed-Advertisement-Executive-On-Contract-2023-24.pdf- என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும். 

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க கடைசி தேதி - 07.06.2023

ஆன்லைன் தேர்வு நடைபெறும் நாள் - 02.07.2023


மேலும் வாசிக்க..

Aavin Vs Amul: அமுல் நிறுவனத்திற்கு எதிராக போர்க்கொடி தூக்கும் தமிழ்நாடு அரசு.. கடிதம் எழுதிய முதலமைச்சர்..என்ன காரணம்?

Kamalhassan IIFA Awards: 'ஆகச்சிறந்த பங்களிப்பாளன்' விருது... கமல்ஹாசனை கௌரவிக்கும் IIFA.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!