பிரபல தனியார் வங்கியான ஐ.டி.பி.ஐ. -யில் ( IDBI Bank ) உள்ள பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலம் 86 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க நாளையே (25.12.2023) கடைசி நாள்.


பணி விவரம்



  • இணை பொது மேலாளர்  (Deputy General Manager (DGM) - (Grade D))

  • துணை பொது மேலாளர் (Asst. General Manager (AGM) - (Grade C) )

  • மேலாளர் ( Manager - (Grade B))


Audit-Information System (IS) , Fraud Risk Management, Risk Management, Corporate Credit/ Retail Banking (including Retail Credit),  Infrastructure Management Department (IMD) - Premises, Security உள்ளிட்ட பிரிவுகளில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 


கல்வித் தகுதி:



  • இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க பி.டெக், இளங்கலை பொறியியல், பி.சி.ஏ., பி.எஸ்.சி. கம்யூட்டர் சயின்ஸ், ஐ.டி.,  முதுகலை ஐ.டி., எம்.எஸ்.சி., எம்.சி.ஏ., பி.எஸ்.சி. கணிதம், Statistics, CA/MBA (Specialization in Banking/ Finance) /CFA/FRM/ICWA ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  • JAIIB/CAIIB/MBA என்ற படிப்புகளிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  • இதற்கு தேவையான கல்வித் தகுதிகள் குறித்து காண https://www.idbibank.in/pdf/careers/Detailed-Advt-Specialist-Officer-Spl-2024-25.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.  


வயது வரம்பு 


இணை பொது மேலாளர்  (Deputy General Manager (DGM) - (Grade D)) - 35- 45 வயது வரை


துணை பொது மேலாளர் (Asst. General Manager (AGM) - (Grade C) ) - 28 - 40 வயது வரை


மேலாளர் ( Manager - (Grade B)) - 25 -35 வயது வரை


ஊதிய விவரம்


இணை பொது மேலாளர்  (Deputy General Manager (DGM) - (Grade D)) - ரூ.76,010/-


துணை பொது மேலாளர் (Asst. General Manager (AGM) - (Grade C) ) - ரூ.63,840/-


மேலாளர் ( Manager - (Grade B)) - ரூ.48,170/-




ஓராண்டுகால probation முடிந்தபிறகு பணி நிரந்தரம் குறித்து முடிவெடுக்கப்படும் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


பணி இடம்:


இதற்கு தேர்ந்தெடுக்கப்படுவர்கள் நாடு முழுவதும் உள்ள வங்கியின் அலுலகத்தில் நியமிக்கப்படுவர்.


விண்ணப்ப கட்டணம்




தேர்வு செய்யப்படும் முறை:


இந்தப் பணிகளுக்கு  நேர்முக தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். 


பெறப்படும் விண்ணப்பங்களில் இருந்து தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். அவர்களுக்கு நேர்காணல் நடைபெறும் தேதி, நேரம் உள்ளிட்ட விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும். 


விண்ணப்பிக்கும்  முறை: 


இதற்கு ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். https://www.idbibank.in/- என்ற லிங்கி கிள்க் செய்யவும்.


விண்ணப்பிக்கும் வழிமுறைகள்: 



  • முதலில் https://www.idbibank.in/pdf/careers/Detailed-Advt-Specialist-Officer-Spl-2024-25.pdf-என்ற இணைப்பில் பணி குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ளவும். 
    https://www.idbibank.in/ - என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.

  • பின்னர், “CAREERS/CURRENT OPENINGS” என்பதை க்ளிக் செய்யவும்.

  • Recruitment of Specialist Officer – 2024-25” பக்கத்திற்கு செல்லவும். 

  • “APPLY ONLINE” என்பதை க்ளிக் செய்யவும்.

  • பின் விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்ட தகவல்களை சரியாக பூர்த்தி செய்யவும்.


விண்ணப்பிக்க கடைசி தேதி - 25.12.2023


மேலும் கூடுதல் விவரங்களுக்கு.. https://www.idbibank.in/pdf/careers/Detailed-Advt-Specialist-Officer-Spl-2024-25.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும். 


அஞ்சல் காப்பீட்டாளர் வேலைவாய்ப்பு


அஞ்சல் துறையில் ஆயுள் காப்பீட்டு/ கிராம அஞ்சல் ஆயுள் காப்பீட்டு விற்பனைக்காக (Postal Life Insurance / Rural Postal Life Insurance products) புதிய நேரடி முகவர்களுக்கான (Direct Agents)வேலைவாய்ப்பு அறிவிப்பினை சென்னை மத்திய கோட்டம் அலுவலகம் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதை காணலாம்.மேலும் வாசிக்க..