சென்னை இரயில் பெட்டி தொழிற்சாலையில் (Integral Coach Factory, Chennai) 10-ஆம் வகுப்பு மற்றும் ஐ.டி.ஐ படித்தவர்களுக்கான அப்ரண்டிஸ் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. 


 தொழில்பழகுநர் சட்டம் 1961, விதிகளுக்கு உட்பட்டு, தொழில் பழகுநர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதற்கு ஐ.டி.ஐ படித்தவர்களும், பத்தாம் வகுப்பு படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாகும்.


பயிற்சியிட விவரங்கள்:



  • Carpenter

  • Electrician

  • Fitter

  • Machinist

  • Painter

  • Welder

  • MLT-Radiology

  • MLT-Pathology

  • PASAA


மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 782


கல்வித் தகுதி:


இதற்கு  10 ஆம் வகுப்பில் தேர்ச்சி அல்லது சம்பந்தப்பட்ட பிரிவில் ஐ.டி.ஐ. படித்திருக்க வேண்டும்.


10-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் பயிற்சி அளிக்கப்படும். ஐ.டி.ஐ. முடித்தவர்களாக இருந்தால் ஓராண்டு கால பயிற்சி வழங்கப்படும். 


வயதுத் தகுதி :


 30.06.2023 அன்று 15 முதல் 24 வயதிற்குள் இருக்க வேண்டும். பழங்குடியின/ பட்டியலின, முன்னாள் பொதுத்துறை ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.


பயிற்சி ஊக்கத்தொகை


Freshers – (10-வது தேர்ச்சி பெற்றவர்கள்) ரூ. 6000/- 


 Freshers – (12-வது தேர்ச்சி பெற்றவர்கள்) ரூ. 7000/- 


3. Ex-ITI – ரூ. 7000/-


தேர்வு செய்யப்படும் முறை : 


பயிற்சி இடங்களுக்கு ஏற்ப 10 ஆம் வகுப்பு, மற்றும் ஐ.டி.ஐ படிப்புகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.


விண்ணப்பிக்கும் முறை


இந்த பயிற்சி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://pb.icf.gov.in/index.php- என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.


 விண்ணப்பிக்க கடைசி தேதி 30.06.2023 ஆகும்.


இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய  https://pb.icf.gov.in/act/notification.pdf - என்ற இணையதளப்பக்கத்தை பார்வையிடவும்.




மேலும் வாசிக்க..


Lust Stories 2 Twitter Review: காமம் எந்த வகை... தமன்னா, மிருணாள் தாக்கூர் நடித்த ’லஸ்ட் ஸ்டோரிஸ் 2’ எப்படி இருக்கு?


Deepavali Ticket Booking: ரெடியா இருங்க மக்களே.. தீபாவளிக்கான டிக்கெட் முன்பதிவு தொடக்கம்.. எப்போ தெரியுமா? முழு விவரம்..