தமிழக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் புதிதாக தொடங்கியுள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உதவிப்பேராசிரியர் உள்பட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும், தகுதியுள்ளவர்கள் அக்டோபர் 18 அன்று நடைபெறும் நேர்முகத்தேர்வில் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சென்னை கொளத்தூரில் புதிதாக அருள்மிகு கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது இக்கல்லூரிக்கு உதவிப்பேராசிரியர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே இப்பணியில் சேர்வதற்கான கல்வித்தகுதி, விண்ணப்பிக்கும் முறை குறித்து இங்கே தெரிந்துகொள்வோம்.



கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணிபுரிவதற்கான தகுதிகளின் விபரங்கள்:


உதவிப்பேராசிரியர்:


B.com, B.B.A, B.Sc (computer science), B.C.A, Tamil, English, Mathematics, Physical Director, Librarian உள்ளிட்ட துறைகளில் உதவிப் பேராசியர் பணியிடங்கள் நிரப்பட உள்ளதால் சம்பந்தப்பட்ட துறைகளில் P.hd அல்லது முதுகலைப்படிப்பு முடித்தவர்கள் இப்பணிக்கு நடைபெறும் நேர்முகத்தேர்வில் கலந்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


எனவே மேற்கண்ட தகுதியுடையவர்கள் வருகின்ற அக்டோபர் 18 அன்று காலை 10 மணிக்கு  அருள்மிகு கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, எவர்வின் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி, S.J.அவென்யூ, கொளத்தூர், சென்னை -99 நடைபெறும் நேர்முகத்தேர்வில் கலந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


உதவியாளர் அல்லது நிதியாளர்


காலிப்பணியிடங்கள் – 1


கல்வித்தகுதி – பி.காம் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.


இளநிலை உதவியாளர் அல்லது தட்டச்சர்


காலியிடம் - 1


கல்வித் தகுதி – பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலம் மற்றும் தமிழில் தட்டச்சு சீனியர் கிரேடு தேர்ச்சி அல்லது தமிழ் தட்டச்சு சீனியர் கிரேடு மற்றும் ஆங்கிலம் ஜூனியர் கிரேடு தேர்ச்சிப்பெற்றிருக்க வேண்டும்.


அலுவலக உதவியாளர்


காலியிடங்கள்– 2


கல்வித் தகுதி : எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


காவலர்


காலியிடங்கள் – 3, இப்பணிக்கு தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.


இதேப்போன்று துப்புரவாளர், பெருக்குபவர் பணியில் சேர வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.


மேற்கண்ட இந்த அனைத்துப் பணியிடங்களுக்குமான நேர்முகத்தேர்வு வருகின்ற அக்டோபர் 18 ஆம் தேதி மதியம் 2 மணிக்கு நடைபெறவுள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் இதில் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு தேவையான அனைத்து ஆவணங்களுடன் நேர்காணலில் கலந்துக்கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.