கோவை மாவட்டம் ஆமலை வட்டம் மற்றும் நகர், அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் அமைக்கப்படவுள்ள மருத்துவ மையத்தில் மருத்துவ அனுவார், செவிலியர் பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் பதவிகளில் நியமனம் செய்வதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


இந்த காலிப்பணியிடங்களுக்கு தகுதியுள்ள இந்து சமயத்தைச் சார்ந்த நபர்களிடமிருந்து 11.06.2023 பார் 5.45 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு பின்னர் வரப்பெறம் விண்ணப்பங்கள் எக்காரணத்


பணி விவரம்:



  • மருத்துவ அலுவலர் (Medical Officer )

  • செவிலியர் (Staff Nurse)

  • பல்நோக்கு மருத்துவ பணியாளர்கள்(Multi Purpose hospital worker/ Attender)


கல்வித் தகுதிகள்:



  • மருத்துவ அலுவலர் பணிக்கு எம்.பி.பி.எஸ். படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  • செவிலியர் பணிக்கு DGNM ( DiplomaIn General NursingMidwife ) படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  • பல்நோக்கு மருத்துவ பணியாளர்கள் பணிக்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்,. தமிழில் எழுத படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.


வயது வரம்பு:



  • மருத்துவ அலுவலர் -1.07.2023 அன்று 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

  • செவிலியர் -1.07.2023 அன்று 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

  • பல்நோக்கு மருத்துவ பணியாளர்கள் -1.07.2023 அன்று 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.


ஊதிய விவரம்:



  • மருத்துவ அலுவலர் - ரூ.75,000

  • செவிலியர் - ரூ.14,000

  • பல்நோக்கு மருத்துவ பணியாளர்கள் - ரூ.6000


தேர்வு செய்யப்படுவது எப்படி?


இதற்கு நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர்.


விண்ணப்பிப்பது எப்படி?


இதற்கு தேவையான ஆவணங்களுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை நேரிலோ அஞ்சலிலோ அனுப்ப வேண்டும். 


விண்ணப்பங்களுக்கு கட்டணம் கிடையாது. விண்ணப்பங்களை நேரிலோ அல்லது https://hrce.tn.gov.in/hrcehome/index.php - -என்கிற இணையதள முகவரியில் அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயில் என்ற பெயரில் உள்ள பக்கத்தில் விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


கவனிக்க..


விண்ணப்பம் அனுப்பப்படும் மேலுறையின் மீது கண்டிப்பாக பதவியின் பெயர் குறிப்பிட்டு அனுப்பப்பட வேண்டும்.


விண்ணப்பதாரர் நல்ல தேக ஆரோக்கியம் உள்ளவராக இருக்க வேண்டும்


விண்ணப்பங்களுடன் அனுப்பப்படும் அனைத்துச் சான்றிதழ்களும் அரசு பதிவு பெற்ற அலுவலர் சான்றொப்பம் பெறப்பட்ட புகைப்பட நகல்களாக மட்டுமே இருக்க வேண்டும். அசல் சான்றிதழ்கள் அனுப்ப கூடாது.


விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:


விண்ணப்பதாரர் விண்ணப்பிக்க வேண்டிய முகவரி உதவி ஆணையர் / செயல் அலுவலர்.


அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயில்,


ஆனைமலை நகர் மற்றும் வட்டம், கோவை மாவட்டம் 642 104


விண்ணப்பிக்க கடைசி தேதி - 11.06.2023




மேலும் வாசிக்க..


மீண்டும் இயங்க தொடங்கிய அரசு பேருந்துகள்.. போராட்டத்தை வாபஸ் பெற்ற ஊழியர்கள்..!


CSK vs GT IPL 2023 Final: ஒருவழியாக தொடங்கும் இறுதிப் போட்டி.. டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்த தல தோனி.. கோப்பை யாருக்கு?