அஞ்சல் ஆயுள் காப்பீடுத்துறையின் கீழ் ஆயுள் காப்பீடு முகவராகப் பணிபுரிய விரும்பமுள்ள கோவில்பட்டி பகுதி மக்கள் வருகின்ற செப்டம்பர் 22 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக்கொள்ளுமாறு அறிவிப்பு வெளியாகியுள்ளது.


இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் மக்களைப் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்கியது. வருமானமின்றியும்,வேலையிழந்தும் பலர் தவித்து வரும் இந்த சூழலில் பல்வேறு பணியிடங்களுக்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகிவருகிறது. இந்நிலையில் தற்போது  இந்திய அஞ்சல் துறையின் கீழ், அஞ்சல் ஆயுள் காப்பீடு முகவராக பணிபுரிவதற்கான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்திய அஞ்சல் துறையின், கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு முகவராக பணிபுரிய விருப்பமுள்ள கோவில்பட்டி அஞ்சல் கோட்டப்பகுதியில் வசிப்போர் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இப்பணிக்கான தகுதிகள் என்ன? தேர்வு செய்யும் முறை குறித்து இங்கே தெரிந்துக்கொள்வோம்.





கோவில்பட்டி பகுதியில் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு முகவராக பணிபுரிய விருப்பம் உள்ள நபர்கள் 18 முதல் 50 வயதிற்குள் இருக்க வேண்டும் எனவும் 10 ஆம் வகுப்பு அல்லது அதற்கு நிகரான அரசுத்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


எனவே மேற்கண்ட தகுதியும், ஆர்வமும் உள்ள நபர்கள் இப்பணியிடங்களுக்கான விண்ணப்பத்தை, தங்களது விண்ணப்பங்களை அஞ்சலகங்களின் மூலம் பெற வேண்டும். பின்னர் விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன், துநிலை அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர், கோவில்பட்டி – 628-501 என்ற முகவரிக்கு வருகின்ற செப்டம்பர் 22 ஆம் தேதிக்குள் பதிவு அஞ்சலில் அனுப்ப வேண்டும். மேலும் கூடுதல் விபரங்களை    கோவில்பட்டி 04632-220368, சங்கரன் கோவில் – 04636-222313, தென்காசி – 04633-222329 ஆகிய எண்ணிற்கு தொடர்புக் கொண்டு  அறிந்துக்கொள்ளலாம்.


இதனையடுத்து விண்ணப்பதார்களுக்கு நேர்முகத்தேர்வு நடைபெறும். இந்த நேர்முகத்தேர்விற்கான தேதி விண்ணப்பத்தாரர்களுக்கு மின்னஞ்சல் அல்லது தொலைப்பேசி வாயிலாக அறிவிக்கப்படும். நேர்காணலுக்கு செல்லும் போது சுய விபரக்குறிப்புகள் மற்றும் கல்விச்சான்றிதழ்கள் ஆகியவற்றை கட்டாயம் எடுத்துச்செல்ல வேண்டும். இதனையடுத்து தேர்ந்தெடுக்கப்படும் கிராம அஞ்சல் ஆயுள் காப்பீடு முகவர்களுக்கு, அவர்கள் மூலம் பெறப்படும் காப்பீட்டு பிரிமியம் அடிப்படையில் கமிஷன் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



குறிப்பாக இப்பணிக்கு தேர்வாகும் முகவர்கள் காப்பீட்டுத்தொகையாக ரூபாய் 5 ஆயிரத்தை தேசிய சேமிப்பு பத்திரம் அல்லது கிசான் விகாஸ் பத்திர வடிவில் அஞ்சலகங்களில் செலுத்த வேண்டும். இந்த  முகவர் காலம் முடிக்கப்படும் போது காப்பீட்டுத்தொகை வட்டியுடன் அவர்களுக்கு திருப்பித்தரப்படும். எனவே ஆர்வமும், தகுதியும் உள்ள நபர்கள் உடனடியாக விண்ணப்பித்து பயன்பெற்றுக்கொள்ளுங்கள்.