தூத்துக்குடி இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி விவரம்
- ஓட்டுநர்
- அலுவலக உதவியாளர்
- இரவுக் காவலர்
கல்வி மற்றும் பிற தகுதிகள்
- ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பிக்க 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கனரக வாகனம் ஓட்டுவதற்கான உரிமம் வைத்திருக்க வேண்டும். நல்ல உடல் தகுதியுடன் இருக்க வேண்டும்.
- அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- இரவுக் காவலர் பணிக்கு விண்ணப்பிக்க 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நன்றாக படிக்க எழுத தெரிந்தவராகவும் இருக்க வேண்டும்.
- இந்து சமயத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.
ஊதிய விவரம்:
ஓட்டுநர் - ரூ.19,500 - ரூ.62,000/-
அலுவலக உதவியாளர் - ரூ.15,700 - ரூ.50,000/-
இரவு காவலர் - ரூ.15,700 - ரூ.50,000/-
விண்ணப்பிக்கும் முறை
இதற்கு விண்ணப்பிக்க ஆவணங்களின் நகல்களுடன் புகைப்படத்துடன் சுயவிலாசமிட்ட ரூ.25/- க்கான தபால் தலை ஒட்டிய உறை உன்றுடன் அஞ்சல் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி
இணை ஆணையர்,
இந்து சமய அறநிலையத்துறை
35/1A, மேலரத வீதி, தூத்துக்குடி- 628 002
வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு, தெரிவு செய்யப்படும் முறை உள்ளிட்ட மேலதிக தகவலுக்கு https://hrce.tn.gov.in/resources/docs/hrcescroll_doc/103/document_1.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி - 17.01.2024 மாலை 5 மணி வரை
வ.உ.சிதம்பரனார் துறைமுக வேலைவாய்ப்பு
தூத்துக்குடியில் உள்ள வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையத்தின் (VOC Port Trust ) அலுவலகத்தில் உள்ள காலிப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி விவரம்:
இணை முதன்மை மருத்துவர் (Deputy Chief Medical Officer Specialist)
மூத்த உதவி செயலாளர் ( Senior Assistant Secretary)
வயது வரம்பு:
இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க 42 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
கல்வி மற்றும் பிற தகுதிகள்
- இணை முதன்மை மருத்துவர் MBBS படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முதுகலை பட்டம் பெற்றவர்களும் இதற்கு விண்ணப்பிக்க தகுதி பெற்றவர்கள்.
- மூத்த உதவி செயலாளர் பணிக்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து ஏதாவது ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- விண்ணப்பிக்கும் துறைகளில் குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்.
- Absorption / Deputation முறையில் இந்தப் பணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.
பணி காலம்:
இந்த பணிக்கு தேர்வு செய்யப்படுவர் இரண்டு ஆண்டுகால ஒப்பந்தம் அடிப்படையில் பணிக்கு அமர்த்தப்படுவர். தேவையெனில் பணிகாலம் நீட்டிக்கப்படும்.
ஊதிய விவரம்:
அரசு விதிகளின்படி ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.60,000 முதல் 1,80,000 வரை இதற்கு ஆரம்ப கால ஊதியமாக வழங்கப்படும். (ரூ.20,600-46,500 prerevised / ரூ. 10750-16750 pre-pre-revised))
எப்படி தேர்வு செய்யப்படுவர்?
இதற்கு கல்வித் தகுதி மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்,
விண்ணப்பிப்பது எப்படி?
இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். https://www.vocport.gov.in/ - என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
கவனிக்க..
இந்த துறைமுகத்தில் பயிற்சித் திட்டங்களும் வழங்கப்படுகின்றன. மாணவர்கள் இணையதளத்தில் உள்ள விவரங்களை தெரிந்து கொண்டு பயன்பெறலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
The Secretary,
V.O.Chidambaranar Port Authority,
Administrative Office Building,
Harbour Estate,
Tuticorin – 628 004.
இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு https://www.vocport.gov.in/applications.aspx - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.
இணை முதன்மை மருத்துவர் (Deputy Chief Medical Officer Specialist) - https://www.vocport.gov.in/port/UserInterface/PDF/DyCMO%20spl%2024-11-2023.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து அறிவிப்பின் விவரத்தை காணலாம்.
மூத்த உதவி செயலாளர் ( Senior Assistant Secretary) - https://www.vocport.gov.in/port/UserInterface/PDF/Filling%20up%20of%20the%20post%20SRAS%20absorption%20deputation.PDF - என்ற இணைப்பை க்ளிக் செய்து அறிவிப்பின் விவரத்தை காணலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி - 22.01.2024