நாகப்பட்டினம் அருகே உள்ள எட்டுக்குடி கிராமத்தில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உள்ள வேலைவாய்ப்பிற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு இந்து சமயத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


பணி விவரம்


எழுத்தர்


கணினி பணியாளர்


நாதஸ்வரம் - மேளம் குழு


தோட்டம்


திருவலகு


கல்வி மற்றும் பிற தகுதிகள்



  • எழுத்தர் பணிக்கு விண்ணப்பிக்க 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  • கணினி பணியாளர் பணிக்கு விண்ணப்பிக்க கணினி அறிவியலில் பட்ட்யம் தமிழ் மற்றும் ஆங்கிலம் தட்ச்சு சான்றிதழ் படிப்பு முடித்திருக்க வேண்டும்.

  • நாதஸ்வரம் பணிக்கு தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். இசைப் பள்ளியில் தொடர்புடைய பிரிவில் சான்றிதழ் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

  • தோட்டம், திருவலகு பணிக்கு விண்ணப்பிக்க தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். 


இதர நிபந்தனைகள்


இந்து மதத்தைச் சார்ந்தவராகவும் தமிழ்நாட்டைச் சார்ந்தவராகவும் இருக்க வேண்டும். இந்தப் பணிக்கு விண்ணப்பித்தவர்களில் தகுதியானவர்களுக்கு நேர்காணலுக்கான அழைப்பு குறித்து தெரிவிக்கப்படும். 


விண்ணப்பக் கட்டணம் கிடையாது.


விண்ணப்பதாரர் 01.01.2023 -ம் தேதியன்று 18 வயது பூர்த்தியடைந்தவராகவும் 45 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.  இந்து மதத்தைச் சேர்ந்தவராகவும் இறை நம்பிக்கை உடையவராகவும் இருத்தல் வேண்டும்.


விண்ணப்பிக்கும் முறை


இதற்கான விண்ணப்ப படிவத்தை https://hrce.tn.gov.in/hrcehome/index.php -என்ற இணையத்தள இணைப்பை க்ளிக் செய்து டவுன்லோடு செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அஞ்சலில் அனுப்ப வேண்டும். 


விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி


உதவி ஆணையர் / செயல் அலுவலர்,


அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோயில் எட்டுக்குடி,


திருக்குவளை வட்டம்,


நாகப்பட்டினம் - 612 2024


விண்ணப்பிக்க கடைசி தேதி - 27.01.2024 மாலை 5 மணி வரை


சென்னையில் உள்ள பிரபல கபாலீஸ்வரர் கோயிலில்  காலியாக உள்ள  பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  இதற்கு தகுதி உள்ள இந்து சமயத்தைச் சார்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.  காலிப்பணியிடங்களின் விவரங்கள் மற்றும் இதர விவரங்களை இக்கட்டுரையில் காணலாம். இதற்கு விண்ணப்பிக்க வரும் 27-ம் தேதி கடைசி தேதியாகும்.


பணி விவரம்



  • நூலகர்

  • அலுவலக உதவியாளர்

  • ஓட்டுநர்

  • உதவி மின் பணியாளர் 


கல்வித் தகுதி



  • நூலகர் பணிக்கு 10-வது தேர்ச்சி அல்லது அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான தகுதி பெற்றிருக்க வேண்டும். நூலக அறிவியலில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

  • அலுவலக உதவியாளர் பணிக்கு 8-ம் வகுப்பு தேர்ச்சியுடன் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

  • ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பிக்க 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இலகுரக வாகனம் அல்லது கனரக வாகனம் ஓட்டுநர் உரிமமும் முதலுதவி குறித்த சான்றிதழும் பெற்றிருக்க வேண்டும். ஓராண்டு ஓட்டுநர் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

  • உதவி மின் பணியாளர் பணிக்கு மின் கம்பிப் பணியாளர் தொழிற்பயிற்சி நிறுவனச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 

  • மின் உரிமம் வழங்கல் வாரியத்திடமிருந்து 'H' சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.


ஊதிய விவரம்



  • நூலகர் - ரூ.18,500 - ரூ.58,600/-

  • அலுவலக உதவியாளர்- ரூ.18,500 - ரூ.58,600/-

  • ஓட்டுநர் - ரூ.18,500 - ரூ.58,600/-

  • உதவி மின் பணியாளர் - ரூ.16,600 - ரூ.52,400/-


இதர நிபந்தனைகள்


இந்து மதத்தைச் சார்ந்தவராகவும் தமிழ்நாட்டைச் சார்ந்தவராகவும் இருக்க வேண்டும். இந்தப் பணிக்கு விண்ணப்பித்தவர்களில் தகுதியானவர்களுக்கு நேர்காணலுக்கான அழைப்பு குறித்து தெரிவிக்கப்படும். 


விண்ணப்பக் கட்டணம் கிடையாது.


அஞ்சலில் விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி


கபாலீசுவரர் கோயில்,


மயிலாப்பூர்,


சென்னை - 04


விண்ணப்பிக்க கடைசி தேதி - 27.01.2024  மாலை 5.45 வரை 


வேலைவாய்ப்பு தொடர்பாக கூடுதல் விவரங்களுக்கு - https://mylaikapaleeswarar.hrce.tn.gov.in/hrcehome/ajax/hppdf_view.php - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.