Job Alert:கம்யூட்டர் சயின்ஸ் டிகிரி முடித்தவரா?298 பணியிடங்கள்: நீதிமன்றத்தில் வேலை - முழு விவரம்!

High Court Of Madras Recruitment: மாவட்ட நீதிமன்றங்களில் உள்ள வேலைவாய்ப்பு பற்றிய முழு விவரங்களை காணலாம்.

Continues below advertisement

சென்னை உயர் நீதிமன்றத்தின் (High Court Of Madras) கீழ் செயல்பட்டு வரும் மாவட்ட நீதிமன்றங்களில் இ-சேவா கேந்திராவின் கீழ் ஒப்பந்தம் அடிப்படையில் தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படுவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

Continues below advertisement

இந்த அறிவிப்பின் மூலம் மொத்தம் 298 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு 18.07.2024 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பணி விவரம்:

தொழில்நுட்ப  உதவியாளர் (Technical Manpower) - 298 

பணி இடம்:

அரியலூர், செங்கல்பட்டு, சென்னை, கோயம்புத்தூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, மயிலாடுதுறை, நாகைப்பட்டினம், நாமக்கல், நீலகிரி, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சேலம், சிவகங்கை,தென்காசி, தஞ்சாவூர், தேனி, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருப்பூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர், வேலூர், விழுப்புரம், விருந்துநகர், புதுச்சேரி ஆகிய மாவட்டங்களில் உள்ள நீதிமன்றங்களில் தேர்ந்தெடுக்கப்படுவர் பணியமர்த்தப்படுவர். 

கல்வித் தகுதி:

இதற்கு விண்ணப்பிப்பவர்கள்  Computer Science), IT, உள்ளிட்ட துறைகளில் இளங்கலைப் பட்டம் அல்லது பொறியியல் பட்டம், பி.சி.ஏ. படித்திருக்க வேண்டும். 

 MCA / M.Sc (Computer Science) / M.E (Computer Science) / M.Tech / M.Sc (IT)  தேர்ச்சி பெற்றவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம். 

ஊதிய விவரம்:

இதற்கு மாத ஊதியமாக ரூ.15,000/- வழங்கப்படும். 

விண்ணப்ப கட்டணம்:

இதற்கு விண்ணப்ப கட்டணம் செலுத்த தேவையில்லை.

வயது வரம்பு:

இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க 10.07.2024 அன்று 35 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை:

இதற்கு நேர்முகத் தேர்வு, சான்றிதழல் சரிபார்ப்பு ஆகியவற்றின் மூலம் தகுதியானவர்கள் தெரிவு செய்யப்படுவர். 

தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் விவரம் வெளியீடு:

https://www.mhc.tn.gov.in/esk_rec/login -என்ற இணையதள முகவரியில் முடிவுகள் குறித்து அறிவிப்பு வெளியிடப்படும். பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்கள் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்படுவர். மெரிட் முறையின் படி, தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

https://www.mhc.tn.gov.in/esk_rec/login - என்ற இணைப்பை க்ளிக் செய்து தேவையான விவரங்கள் மற்றும் ஆவணங்களின் நகல்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பிக்க கடைசி நாள் - 18.07.2024

https://www.mhc.tn.gov.in/esk_rec/docs/Notification%20No.%20242.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து வேலைவாய்ப்பு குறித்த முழு விவரங்களை காணலாம்.  


 

Continues below advertisement
Sponsored Links by Taboola