தமிழ்நாடு மருத்துவ வாரியத்தில் சுகாதார ஆய்வாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் ( Medical Service Recruitment Board - MRB) வெளியிட்டுள்ளது.
மருத்துவ சார்நிலைப் பணிகள்:
தமிழ்நாடு மருத்துவ சார்நிலைப் பணிகளில் அடங்கிய பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் இந்த மாதம் இறுதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணி விவரம்:
Health Inspector Grade-II
மொத்த பணியிடங்கள் - 1,066
கல்வித் தகுதி :
இந்த வேலைவாய்ப்பிற்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் Health Worker (Male) course / Health
Inspector/ Sanitary Inspector சான்றிதழ் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
10+2 என்ற வகையில் பள்ளிக் கல்வி பயின்றிருக்க வேண்டும்.
மதிப்பெண் கணக்கிடும்போது, சுகாதார பயிற்சி தேர்வுக்கு 50 சதவீத வெயிட்டேஜ், பிளஸ் 2 தேர்வுக்கு 30 சதவீத வெயிட்டேஜ், எஸ்எஸ்எல்சி தேர்வுக்கு 20 சதவீத வெயிட்டேஜ் அளிக்கப்படும்.
வயது வரம்பு விவரம் :
இந்த பணியிடங்களுக்கு 18 வயது முதல் 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பில் அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளின் விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.
தேர்வு செய்யப்படும் முறை :
இந்த பணியிடங்களுக்கு பத்தாம் வகுப்பு, 12 - ஆம் வகுப்பு மற்றும் சான்றிதழ் படிப்புகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
இதற்கு விண்ணப்பிக்க https://mrbonline.in/ - என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காணலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.07.2024