தருமபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி பிரிவில் உள்ள பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஓட்டுநர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி விவரம்:
அலுவலக உதவியாளர்
இரவுக் காவலர்
கல்வித் தகுதி:
இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.
இரவுக் காவலர் பணிக்கு தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
இதர பிரிவிவர் 32 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
பட்டிலின பிரிவினர் /பழங்குடியின பிரிவினர், ஆதரவற்ற விதவை உள்ளிட்டோருக்கு அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
ஊதிய விவரம்:
அலுவலக உதவியாளர் - ரூ.15,700 - ரூ.50,000/-
இரவுக் காவலர் - ரூ.15,700 - ரூ.50,000/-
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகள்:
- விண்ணப்பதாரர்கள் கல்வித்தகுதி, இருப்பிடம், சாதிச்சான்று, முன்னுரிமை சான்று ஆகியவைகளுக்கு ஆதாரம் கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும்.
- இனசுழற்சி, வயது மற்றும் கல்வித் தகுதியற்ற நபர்களிடமிருந்து வரப்பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
- ஒவ்வொரு பணியிடத்திற்கும் தகுதியின் அடிப்படையில் தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும்.
- விண்ணப்பதாரர் காலிப்பணியிடம் அறிவிக்கப்பட்ட மாவட்டத்திற்குள் வசிப்பவராக இருக்க வேண்டும்.
- அரசு விதிகளின்படி இனசுழற்சி முறை பின்பற்றி நியமனங்கள் மேற்கொள்ளப்படும்.
- சுய முகவரியுடன் கூடிய ரூ.25/- அஞ்சல் வில்லை ஒட்டப்பட்ட அஞ்சல் உறை -1 (10*4 Inches Postal Cover) இணைத்து அனுப்பப்பட வேண்டும்.
அஞ்சல் அனுப்பப்பட வேண்டிய முகவரி:
மாவட்ட ஆட்சியாளரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி)
மாவட்ட ஆட்சியர் அலுவலகம், இரண்டாவது தளம்,
தருமபுரி = 636 705
எப்படி விண்ணப்பிப்பது?
தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம் மற்றும் தேதி நேர்காணல் கடிதம் (Call Letter) பின்னர் அனுப்பி வைக்கப்படும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விண்ணப்ப படிவத்தை தரவிறக்கம் செய்ய https://www.dharmaburi.tn.nic.in/- என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 21.11.2023 மாலை 05.45 வரை
அதிகாரப்பூர்வ வலைதள முகவரி- https://cdn.s3waas.gov.in/s366368270ffd51418ec58bd793f2d9b1b/uploads/2023/11/2023111455.pdf / https://cdn.s3waas.gov.in/s366368270ffd51418ec58bd793f2d9b1b/uploads/2023/11/2023110825.pdf- என்ற லிங்கை கிளிக் செய்து அறிவிப்பின் முழு விவரத்தை தெரிந்து கொள்ளலாம்.