வேலை தேடுவோர்களின் கவனத்திற்கு.. வரும்திங்கள் கிழமைக்குள் (ஜூலை 31-ம் தேதி) விண்ணப்பிக்க வேண்டிய வேலைவாய்ப்பு குறித்த முழு விவரங்களை இக்கட்டுரையில் காணலாம். விண்ணப்பிக்க மறந்துடாதீங்க.
மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தின் வேலைவாய்ப்பு
தமிழ்நாடு மருத்துவ வாரியத்தில் சுகாதார ஆய்வாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் ( Medical Service Recruitment Board - MRB) அறிவிப்பினை வெளியிடப்பட்டிருந்தது.
தமிழ்நாடு மருத்துவ சார்நிலைப் பணிகளில் அடங்கிய பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் இந்த மாதம் இறுதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் கடைசி நேரம்வரை காத்திருக்காமல் உடனடியாக விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பணி விவரம்:
Health Inspector Grade-II
மொத்த பணியிடங்கள் - 1,066
கல்வித் தகுதி :
இதற்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் Health Worker (Male) course / Health
Inspector/ Sanitary Inspector சான்றிதழ் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 10+2 என்ற வகையில் பள்ளிக் கல்வி பயின்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம்:
இந்தப் பணியிடத்திற்கு ரூ. 19,500 முதல் ரூ.62,000 வரை மாத ஊதியமாக வழங்கப்படும். (Pay Matrix Level-11)
விண்ணப்பிக்கும் முறை :
இதற்கு விண்ணப்பிக்க https://mrbonline.in/ - என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 31.07.2023
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.mrb.tn.gov.in/pdf/2023/HI_Gr2_notification_110723.pdf- என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.
*******
EMRS Recruitment 2023
பழங்குடியினர் நலத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஏகலைவா மாதிரி உறைவிட பள்ளிகளில் ((Eklavya Model Residential Schools) காலியாக உள்ள பள்ளி முதல்வர், முதுநிலை பட்டதாரி ஆசிரியர், கணக்கர், இளநிலை உதவியாளர் (தலைமையகம்) உள்ளிட்ட பல்வேறு காலிப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணியிட விவரம்:
- பள்ளி முதல்வர் -303
- முதுநிலை பட்டதாரி ஆசிரியர் - 2266
- கணக்கர் -361
- இளநிலை உதவியாளர் (தலைமையகம்)- 759
- ஆய்வக உதவியாளர்- 373
விண்ணப்பிப்பது எப்படி?
www.emrs.tribal.gov.in-என்ற இணையதள பக்கத்தில் மட்டுமே விண்ணப்பங்கள் பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க கடைசி தேதி -31.07.2023
UPSC Recruitment 2023
மத்திய அரசின் பல்வேறு துறைகளுக்கான காலிப் பணியிடங்கள் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு போட்டித் தேர்வுகளின் மூலம் நிரப்பப்படுகின்றன. தற்போது மத்திய அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் (UPSC – Union Public Service Commission) மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. தற்போதைய அறிவிப்பின்படி மொத்தம் 261 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலியாக உள்ள Air Worthiness Officer, Livestock Officer உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்படுவர் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் உள்ள அலுவலங்களில் பணியமர்த்தப்படுவர். மத்திய ஆயுஷ் அமைச்சகம், விமான போக்குவரத்து துறை உள்ளிட்ட துறைகளில் உள்ள பணியிடங்கள் இந்த வேலைவாய்ப்பு மூலம் நிரப்பப்பட உள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி?
www.npcil.nic.in - என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
தேவையான சான்றிதழ் உடன் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி -31.07.2023
இது தொடர்பான கூடுதல் விவரங்கள் மற்றும் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்ய https://www.npcil.nic.in/WriteReadData/userfiles/file/Advt_30062023_01.pdf- என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
*******
CSIR Karaikudi Recruitment:
விஞ்ஞானி
பணியிடம் - காரைக்குடி
விண்ணப்பிப்பத்து எப்படி?
https://www.cecri.res.in. - என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணபிக்க கடைசி தேதி - 31.07.2023
இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு https://scitarecruit.cecri.res.in/Advt/Advt_02_2023.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.
********
மாவட்ட நீதிபதி வேலைவாய்ப்பு
மாவட்ட நீதிபதி பதவிக்கான அறிவிப்பை சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதற்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணி விவரம்:
மாவட்ட நீதிபதி (Entry Level)
மொத்த பணியிடங்கள் - 50
விண்ணப்பிப்பது எப்படி?
இதற்கு விண்ணப்பிக்க www.tn.gov.in அல்லது https://www.mhc.tn.gov.in - என்ற இணைப்பை க்ளிக் செய்து தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி - 31.07.2023