மத்திய அரசு பொதுத்துறை நிறுவனமான பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் திட்டப் பொறியாளர், ட்ரெய்னி இஞ்ஜினியர் ஆகிய இடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி விவரம்
திட்டப் பொறியாளர் (Project Engineer)
ட்ரெய்னி இஞ்ஜினியர் (Trainee Engineer-I (Computer Science))
மொத்த பணியிடங்கள் - 23
கல்வித் தகுதி:
எலக்ட்ரானிக்ஸ்,மெக்கானிக்கல் ஆகிய பொறியியல் பாடப் பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில், பல்கலைக்கழக மானியக் குழு அல்லது AICTE ஆல் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
மனிதவள மேம்பாடு படித்த திட்ட அலுவலர் பணிக்கும் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு:
இதற்கு விண்ணப்பிக்க 32 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
மேலும் அரசு விதிமுறைகளின் படி இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் வயதுகளில் தளர்வு அளிக்கப்படும்.
ஊதிய விவரம்:
- திட்ட பொறியாளர் / அதிகாரி - ரூ.40,000 (2-ம் ஆண்டு- ரூ.45,000/ 3-ஆம் ஆண்டு -ரிஊ.50,000/ 4-ம் ஆண்டு ரூ.55,000 )
- பயிற்சி பொறியாளர் - ரூ30,000 (2-ம் ஆண்டு -ரூ.35,00 / 3-ம் ஆண்டு -ரூ.40,000)
- திட்ட பொறியாளர் பணி நான்கு ஆண்டுகளும், பயிற்சி இஞ்ஜினிய பணி மூன்று ஆண்டுகளும் ஒப்பதம் அடிப்படையிலானது.
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்துத் தேர்வு, ட்ரேட் டெஸ்ட் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி?
இதற்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்க விரும்புவோர் https://bel-india.in/CareersGridbind.aspx?MId=29&LId=1&subject=1&link=0&issnno=1&name=Recruitment+-+Advertisements-என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும்போது 10- ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், பட்டம் பெற்றதற்கான சான்றிதழ், புகைப்படம் மற்றும் கையொப்பம் ஆகியவற்றை பதிவேற்றம் செய்ய வேண்டும்.மேலும் நேர்காணலின் போது அசல் சான்றிதழ்களை கொண்டு வர வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்:
இதற்கு விண்ணப்ப கட்டணமாக திட்டப் பொறியாளார் ரூ.472/- (ஜி.எஸ்.டி. தொகையுடன்) விண்ணப்பிக்க வேண்டும். பயிற்சி பொறியாளர் ரூ.177 ஜி.எஸ்.டி. சேர்த்து செலுத்த வேண்டும், மேலும், பட்டியலின பிரிவினர் / பொதுப்பணி துறையினர் ஆகியோருக்கு விண்ணப்ப கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான முழு விவரத்திற்கு https://bel-india.in/Documentviews.aspx?fileName=25.07.2023%20-%20PE%20TE%20WEB%20AD%202023%20-%20ENGLISH.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி - 09.08.2023
மேலும் வாசிக்க..
ஊட்டி போறீங்களா? ரூ. 7000-தான்! ஆங்கிலேயர் கட்டிய வீட்டில் இத்தனை அழகா! - இதை மிஸ் செய்யாதீங்க
Dog Temple: கர்நாடகாவின் 'நாய்' கோயில்… நாய்களை போற்றி வணங்கும் கிராமம்.. பின்கதை என்ன?