தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை,  பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை மற்றும் மாவட்ட நலச்சங்கம் ஆகியவற்றின் கீழ் செயல்படும் திருச்சிராப்பள்ளியில் செயல்படும் நகர்ப்புற மருத்துவ நிலையங்களில் உள்ள காலிப்பணியிடங்களை தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 


இந்தப் பணியிடங்களுக்கு ரூ.60 ஆயிரம் வரை மாத ஊதியம் வழங்கப்பட உள்ளது. இதற்கான தகுதி என்னென்ன என்பது குறித்து இக்கட்டுரையில் காணலாம்.


பணி  விவரம்: 


மருத்துவ அலுவலர் (Medical Officer)


Health Inspector Grade II,


Health worker/support Staff 


மொத்த பணியிடங்கள் - 75


கல்வித் தகுதி: 



  •  மருத்துவ அலுவலர் பணிக்கு இளங்கலை மருத்துவர் படிப்பு (MBBS) முடித்திருக்க வேண்டும். மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும். 

  • Health Inspector பணியிடத்திற்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதோடு, பல்நோக்கு சுகாதார பணியாளர் / சுகாதார ஆய்வாள/ துப்புரவு ஆய்வாளர் ஆகிய துறைகளில் 2 ஆண்டுகால பணி  அனுபவம் இருக்க வேண்டும். 12ஆம் வகுப்பில் உயிரியல் அல்லது தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடத்தை தேர்வு செய்து படித்திருக்க வேண்டும். 

  • பத்தாம் வகுப்பில் தமிழை மொழிப் பாடமாக கொண்டு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  • Health worker/support Staff பணியிடத்திற்கு 8 -ஆம் வகுப்பு மற்றும் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.


வயது வரம்பு: 


மருத்துவ அலுவலர் (Medical Officer) - 40- வயதுக்குள் இருக்க வேண்டும்.


Health Inspector Grade II - 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.


Health worker/support Staff  - 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.


ஊதிய விவரம்: 


Medical Officer - ரூ.60,000/-
Health Inspector - ரூ.14,000/-
Health worker/support Staff -ரூ.8,500/-


விண்ணப்பிக்கும் முறை:


இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க  விண்ணப்பப் படிவங்களைத் திருச்சிராப்பள்ளி துணை இயக்குநர் சுகாதரப்பணிகள் அலுவலகத்தில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பெற்றுக்கொள்ளலாம். மேலும், விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து நேரிலோ அல்லது விரைவுத் தபால் மூலமாகவோ அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


கவனிக்க...


இந்த பணியிடங்களின் பதவிக்காலம் 11 மாதங்கள் ஆகும். 


எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்பட்டமாட்டாது.


பணியிடல் சேருவதற்கான சுயவிருப்ப ஒப்புதல் கடிதம் அளிக்கப்பட வேண்டும்.


தொடர்புக்கு..’


தொலைப்பேசி எண். 0431 - 2333112


மின்னஞ்சல் முகவரி - dphtry@nic.in


 


அஞ்சல் அனுப்ப வேண்டிய முகவரி:


துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகம்,


ரேஸ்கோர்ஸ் ரோடு, ஜமால் முகம்மது கல்லூரி அருகில்,


T.V.S.டோல்கேட், திருச்சிராப்பள்ளி - 620 020.


விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 08.02.2023 மாலை 5 மணி வரை.


இது தொடர்பான முழு விவரத்திற்கு https://cdn.s3waas.gov.in/s3f73b76ce8949fe29bf2a537cfa420e8f/uploads/2023/01/2023013051.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.