மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த பட்டதாரி (சி.ஜி.எல்.) (Combined Graduated Level Examination) பணிக்கான இரண்டாம் நிலைத் தேர்வு (Tire - 2) தேதி குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 



இரண்டாம் நிலைத் தேர்வு தேதி:


இரண்டாம் நிலைத் தேர்வு மார்ச் 2-ஆம் தேதியில் இருந்து 7-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இரண்டாம் நிலைத் தேர்வு மூன்று தாள்களை கொண்டிருக்கிறது. 


பணி விவரம்


Combined Graduate Level Service


காலி இடங்கள்- தோராயமாக 20,000 காலியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


உதவி தணிக்கை அதிகாரி, உதவி கணக்கு அதிகாரி, இளநிலை புள்ளியல் அதிகாரி உள்ளிட்ட பதவிகளுக்கு நடக்கும் எஸ்.எஸ்.சி சி.ஜி.எல் முதல்நிலைத் தேர்வு கடந்தாண்டு டிசம்பர் 1- ஆம் தேதி முதல் டிசம்பர் 13 ஆம் தேதி வரை நடைபெற்றது. 


இந்நிலையில், இரண்டாம் நிலைத் தேர்வு குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. 


இரண்டாம் நிலைத் தேர்வு மார்ச் 2-ஆம் தேதியில் இருந்து 7-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இரண்டாம் நிலைத் தேர்வு மூன்று தாள்களை கொண்டிருக்கிறது. 


முதல் தாள் இரண்டு பிரிவுகளாக நடக்க உள்ளது. 


செசன் 1 மூன்று நிலைகளில் நடைபெறும். முதல் நிலை ஒரு மணி நேர தேர்வு- கணிதம், பொது அறிவி திறனறிதல் உள்ளிட்டவைகள் சார்ந்த கேள்விகளை கொண்டிருக்கும். 


செசென் 2 - ஒரு மணி நேரம் வழங்கப்படும். இதில் ஆங்கிலம், மொழி, பொது அறிவு உள்ளிட்டவைகள் சார்ந்த கேள்விகள் இடம்பெறும். செசன் 3- இது 15 நிமிடங்கள். கம்யூட்டர் அறிவு தொடர்பான கேள்விகள் இடம்பெறும். 


இதை தொடர்ந்து இரண்டாம் நிலைத் தேர்விற்கான செசன் -2 தேர்வு நடைபெறும். 


ஆன்லைன் தேர்வு என்பதால் நேர மேலாண்மை முக்கியம். குறிப்பிட்ட கால அளவு முடிந்த பிறகு போர்டல் செயல்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தேர்வு பாடத்திட்டம்:




 




எஸ்.எஸ்.சி தேர்வு


மத்திய அரசின் அமைச்சகங்கள், துறைகள் மற்றும் அலுவலகங்களில் தொழில்நுட்பம் சாராத பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மத்திய ஆள் சேர்ப்பு முகமை சார்பில் இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது. தேசிய அளவிலான தேர்வு மூலம் இந்தப் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. 


அறிவிப்பின் கூடுதல் விவரஙக்ளுக்கு.. https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/Important_Notice_24022023.pdf- என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.


எப்படி தேர்வு அட்டவணை பதிவிறக்கம் செய்வது? 



  • https://ssc.nic.in/- எஸ்.எஸ்.சி.-யின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்கு செல்லவும். 

  • அதில், Latest News என்பதற்கு கீழே சமீபத்திய அறிவிப்புகள் வழங்கப்பட்டிருக்கும். 

  • முதலில் உள்ள லிங்கை க்ளிக் செய்யவும். 


எஸ்.எஸ்.சி.-யின் ஒருங்கிணைந்த பட்டதாரிகளுக்கான தேர்விற்கு 33 லட்சத்து 55 ஆயிரத்து 194 பேர் முதல்நிலை தேர்வு எழுதியுள்ளனர். இதில் 3 லட்சத்து 86 ஆயிரத்து 653 பேர் இரண்டாம் நிலை தேர்விற்கு தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 




மேலும் வாசிக்க.. UPSC EPFO Recruitment 2023 : யு.பி.எஸ்.சி. பணி; இன்று முதல் விண்ணப்பிக்கலாம்? யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? முழு விவரம்!


மேலும் வாசிக்க,. Indian Bank Recruitment: வங்கியில் வேலை வேண்டுமா? இம்மாதம் 28-ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி! முழு விவரம்!