மத்திய அரசு நிறுவனமான கெயில் இந்தியா நிறுவனத்தில் எஸ்.சி, எஸ்.டி., ஓபிசி மற்றும் மாற்றுத்தினாளாளிகளுக்கென வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்.
பணி குறித்த கூடுதல் விவரங்கள்:
பதவியின் பெயர்: Manager, Senior Engineer,Senior Officer
காலி இடங்கள்- 51 காலியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி: பட்டப்படிப்பு*
கல்வி தகுதியானது, பதவிக்கு ஏற்ப மாறுபடுகிறது, எனவே பணி குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்ய்வும்.GAILOPENSRD32021DETAILEDADVT16092022NEW.pdf (gailonline.com)
விண்ணப்பிக்க கடைசி தேதி:
பணிக்கு ஏற்ப கலவித்தகுதி மற்றும் வயது மாறுபடுகிறது. எனவே விண்ணப்பத்தாரர்கள் அறிக்கையை பார்த்து தெரிந்து கொள்ளவும். GAILOPENSRD32021DETAILEDADVT16092022NEW.pdf (gailonline.com)
கூடுதல் தகவல்களுக்கு:
ஆங்கில மொழியில் அறிக்கை GAILOPENSRD32021DETAILEDADVT16092022NEW.pdf (gailonline.com)
விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:
- முதலில் https://gailonline.com/# என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
- home page- ல் Career என்பதை கிளிக் செய்யவும்.
- Applying to Gail என்பதை கிளிக் செய்யவும்
SPECIAL RECRUITMENT DRIVE FOR SC/ ST/ OBC (NCL)/PwBD CANDIDATES IN VARIOUS DISCIPLINES என்பதில் Apply Now என்பதை கிளிக் செய்யவும்.
- புதிதாக தோன்றிய விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்டுள்ள சரியான தகவல்களை பூர்த்தி செய்யவும்
- அடுத்ததாக பணி குறித்தான அறிவிக்கை இருக்கும். அதனை கிளிக் செய்து பணி குறித்து விரிவான தகவல்களை தெரிந்து கொள்ளவும் https://gailonline.com/CRApplyingGail.html
- விண்ணப்பத்தை பூர்த்தி செய்தவுடன், விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டியவர்கள் கட்டணத்தை செலுத்திவிட்டு விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.
Also Read: TNPSC குரூப்- 3 தேர்வு அறிவிப்பு; கல்வித்தகுதி , ஊதியம் உள்ளிட்ட கூடுதல் விவரங்கள் இதோ..
Also Read: TNPSC Recruitment: தலைமைச் செயலகத்தில் அரசுப்பணி: ரூ.2.05 லட்சம் ஊதியம் - விண்ணப்பிப்பது எப்படி?
----------------------------------
மற்றுமொரு வேலைவாய்ப்பு:
Recrucitment: இந்தியன் ஆயில் நிறுவனத்தில் அப்ரண்டீஸ் பயிற்சிக்கான அறிவிப்பு- முழு விவரம் இதோ!
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (indian oil corporation) நிறுவனத்தில் உள்ள காலியான உள்ள பிட்டர், பாய்லர், ஆப்ரேட்டர், கணக்கு நிர்வாகி, உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணி நிலையில் உள்ள தொழில்நுட்ப பயிற்சியாளர்களுக்கான (Technical Apprentice) தேர்வு செய்வதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
பணி விவரம்:
மொத்தம் 1535 பணியிடங்களுக்கு தொழில்நுட்ப பயிற்சியாளர்கள் நிரப்பப்பட உள்ளது.
பயிற்சி கால ஊதிய விவரம்:
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி, தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு பயிற்சி காலமான ஓராண்டுக்கு மாத ஊதியம் வழங்கப்படும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்படுள்ளது.
இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கவேண்டிய கடைசி நாள் : 2022 அக்டோபர், 10 மாலை 6 மணி வரை.
எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: 06-11-2022
சான்றிதழ் சரிபார்ப்பு : 28-11-2022 - 07-12-2022
எழுத்துத் தேர்வு தேதியில் மாற்றம் இருக்கலாம் என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்துத் தேர்வில் பெறப்பட்ட மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பயிற்சி காலம் : தொழில்நுட்ப பயிற்சியாளர் பாய்லர்( மெக்கானிக்கல்) பணிக்கு 24 மாதங்கள்; அலுவலக உதவியாளர் (Secretarial Assistant), டேட்டா எண்ட்ரி ஆப்பிரேட்டர் (திறன் சான்றிதழ் வைத்திருப்பவர்கள்) பணிக்கு 15 மாதங்கள்; இதர பணிகளுக்கு 12 மாதங்கள் பயிற்சி வழங்கப்படும்.
விண்ணப்பத்தாரர் ஏதேனும் ஒரு பணிக்கு மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். பயிற்சி காலம் முழுவதற்கும் 32 நாட்கள் விடுமுறை அளிக்கப்படும். காலாண்டிற்கு (அதாவது மூன்று மாதங்களில்) 8 நாட்கள் விடுமுறை எடுத்து கொள்ளலாம். மேலும் கூடுதல் விவரஙகள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வயது வரம்பு:
இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 24 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
https://www.iocrefrecruit.in/iocrefrecruit/advert_pdf/115.pdf என்ற லிங்கை கிளிக் செய்து கல்வித் தகுதி, கட்டணம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றின் விவரத்தை தெரிந்து கொள்ளலாம்.
இந்தியன் ஆயில் நிறுவனத்தின் https://www.iocrefrecruit.in/iocrefrecruit/index அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தில் கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.