தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தில் காலியாக உள்ள 395 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துக்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு வேலைக்குத் தான் செல்ல வேண்டும் என்பது இளைஞர் பலரின் கனவாக உள்ளது. இதற்காக பல ஆண்டுகள் காத்திருக்கும் நிலையையெல்லாம் நாம் பார்த்திருக்கிறோம். இந்நிலையில் தான் இளைஞர்கள் பலரின் கனவை நினைவாக்கும் விதமாக அரசுப்போக்குவரத்துத் துறையில் அப்ரன்டிஸ் பணிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கோவை பணிமனையின் கீழ் 395 வெல்டர் மற்றும் மோட்டார் வாகன மெக்கானிக் பணிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், விண்ணப்பிப்பதற்கான தகுதி? வயது வரம்பு மற்றும் விண்ணப்பிக்கும் முறை குறித்து இங்கே தெரிந்துக்கொள்வோம்.
அரசுப்போக்குவரத்து துறையில் அப்ரன்டிஸ் பணிக்கானத் தகுதிகள்:
கல்வித்தகுதி:
வெல்டர் மற்றும் மோட்டார் வாகன மெக்கானிக் பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 8 ஆவது மற்றும் 10 வது தேர்ச்சிப்பெற்றிருக்க வேண்டும்.
மேற்கண்டப் பிரிவுகளில் பணியாற்றிய முன் அனுபவம் உள்ளவர்களுக்கு பணியின் போது முன்னுரிமை வழங்கப்படும்.
வயது வரம்பு :
தமிழ்நாடு அரசுப்போக்குவரத்து துறையில் அப்ரன்டிஸாக பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள், பதவிகளுக்கு ஏற்றவாறு வயது வரம்பு நிர்ணயம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேப்போல் எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வுகள் கிடைக்கப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
தமிழக அரசின் போக்குவரத்து துறையின் அப்ரன்டிஸ் பணிக்கு விண்ணப்பத்தாரர்கள் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
கோவை அரசு பணிமனையில் அப்ரன்டிஸாகப் பணிபுரிய ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள், https://www.apprenticeshipindia.gov.in/apprenticeship/opportunity-view/61a4a72b4e6a0260d728c253 என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
அதேப்போன்று மோட்டார் வாகன மெக்கானிக் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் https://www.apprenticeshipindia.gov.in/apprenticeship/opportunity-view/61a4a4ac5847cf5b624d4ba2 என்ற இணையதள பக்கத்தின்வ வாயிலாக விண்ணப்பித்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு முறை:
மேற்கண்ட முறைகளில் அரசுப்போக்குவரத்துத்துறையில் அப்ரண்டிஸ் பணிக்கு விண்ணப்பிக்கப்படும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு முறை மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பளம்:
எழுத்து மற்றும் நேர்முகத்தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் 8 ரூபாய் முதல் பணிக்கு ஏற்றவாறு ஸ்டைபன் வழங்கப்படுவதாக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இப்பணியிடங்கள் குறித்த கூடுதல் விவரங்களை அரசின் அதிகாரபூர்வ இணையதளத்தின் வாயிலாகத் தெரிந்துக்கொள்வோம்.
எனவே தமிழக அரசுப்போக்குவரத்து துறையில் பணியாற்ற வேண்டும் என்ற ஆசையில் உள்ள இளைஞர்கள் உடனடியாக மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பித்துக்கொள்ளுங்கள். மேலும் இதில் தேர்வாகும் இளைஞர்கள் கோவை அரசுபணிமனையில் பணியமர்த்தப்படுவார்கள் எனவும் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.