தமிழ்நாடு ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆர்வமும், தகுதியும் உள்ள பட்டதாரி இளைஞர்கள் டிசம்பர் 24 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக்கொள்ளவும்.


ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள் என்பது இந்திய அரசின் மூலம் வழங்கப்படும் நலத்திட்டங்களில் ஒன்றாகும். இதன் மூலம் 6 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் மற்றும் அவர்களின் தாய்மார்களுக்கு சத்தான உணவு மற்றும் முதன்மையான சுகாதாரப் பராமரிப்பு ஆகியவற்றை வழங்குவதை முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.  இந்த திட்டத்தின் கீழ் பலர் பணியாற்றிவரும் நிலையில் தற்போது காலியாக உள்ள ஒருங்கிணைப்பாளர், உதவியாளர் உள்ளிட்ட 95 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், இதற்கான தகுதி? விண்ணப்பிக்கும் முறை குறித்து இங்கே தெரிந்துக்கொள்வோம்.





ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் (Block Coordinator) பணிக்கானத் தகுதிகள்:


காலிப்பணியிடங்கள் -28


கல்வித் தகுதி-  விண்ணப்பதாார்கள் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். மேலும் 2 ஆண்டு பணி அனுபவம் அவசியம்.


வயது வரம்பு -விண்ணப்பதார்கள்  35 வயதிற்குள் இருக்க வேண்டும்.


சம்பளம் - ரூ. 20,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


ஒன்றிய திட்ட உதவியாளர் (Block Project Assistant) பணிக்கானத் தகுதிகள்:


காலிப்பணியிடங்கள் - 52


கல்வித் தகுதி - ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் 1 ஆண்டு பணி முன் அனுபவம்  பெற்றிருக்க வேண்டும்.


வயது வரம்பு - 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.


சம்பளம் -ரூ. 15,000


மாவட்ட ஒருங்கிணைப்பாளர் (District Coordinator) பணிக்கானத் தகுதிகள்:


காலிப்பணியிடங்கள் - 05


கல்வித் தகுதி - இளங்கலை கணினி அறிவியல் (Computer Science) அல்லது தகவல் தொழில்நுட்பத்தில் (IT) பட்டப்படிப்புடன் 2 ஆண்டு பணி அனுபவம்  பெற்றிருத்தல் வேண்டும்.


வயது வரம்பு - 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.


சம்பளம் : ரூ. 30,000


மாவட்ட திட்ட உதவியாளர் (District Project Assistant) பணிக்கானத் தகுதிகள்


காலிப்பணியிடங்கள் - 05


கல்வித் தகுதி -ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் 2 ஆண்டு பணி அனுபவம் அவசியம்.


வயது வரம்பு -35 வயதிற்குள் இருக்க வேண்டும்.


சம்பளம் - ரூ. 18,000


நிதி மேலாண்மை நிபுணர் (Financial Management- Specialist), கணக்காளர் (Accountant), திட்ட இணை உதவியாளர் (Project Associate) மற்றும்  தரவு உள்ளீடு இயக்குனர் (Date Entry Operator) ஆகிய பணியிடங்களும் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.





விண்ணப்பிக்கும் முறை:


மேற்கண்டப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள், https://www.icds.tn.gov.in/icdstn/pdf/Application_form_NNM.pdf என்ற இணையதளப்பக்கத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்துக்கொள்ள வேண்டும்.


பின்னர் அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் பூர்த்தி செய்து தேவையான அனைத்து ஆவணங்களுடன் அஞ்சல் வழியாக வருகின்ற டிசம்பர் 24 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.


அனுப்ப வேண்டிய முகவரி:


Director cum Mission Director,


Department of Integrated Child Development Services,


 No.1, Dr.M.G.R Salai,


Taramani,


Chennai – 600 113.


தேர்வு முறை:


மேற்கண்ட வழிமுறைகளைப்பயன்படுத்தி விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் இந்த வேலைவாய்ப்பு குறித்த  கூடுதல் விபரங்களை https://www.icds.tn.gov.in/icdstn/pdf/Terms_of_Recruitment.pdf என்ற இணையதளப்பக்கத்தின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.