தமிழ்நாடு மீன்வள சார்நிலைப் பணியில் அடங்கிய மீன்வளதுறை ஆய்வாளர்(மீன்வள  நலத்துறை) பதவிக்கான காலிப்பணியிடங்களுக்கு நேரடி நியமனம் செய்வதற்கான கணினி வழி தேர்விற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து நவம்பர் 12- ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளவைகள் குறித்து காண்போம்.


பணி விவரம்:



மீன்துறை ஆய்வாளர் காலியிடங்கள்: 64 


ஊதிய விவரம்:


இந்தப் பணிக்கு மாதம் ரூ.37,700 முதல் ரூ. 1,19,500 வரை மாத ஊதியமாக வழங்கப்பட உள்ளது.


கல்வித் தகுதி:


 மீன்வள அறியல் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது விலங்கியல் அல்லது கடல் உயிரியல் அல்லது கடலோர மீன் வளர்ப்பு அல்லது கடல் வளர்ப்பு அல்லது சிறப்பு விலங்கியல் அல்லது கடற்கரை இன்ஜினியரிங் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.


ஒரு முறை பதிவு:


விண்ணப்பதாரர்கள் பதிவுக்கட்டணமாக ரூ.150/-ஐ (ரூபாய் நூற்று ஐம்பது மட்டும்) செலுத்தி தங்களது அடிப்படை விவரங்களை இணையவழி நிரந்தரப்பதிவு மூலமாக (OTR) கட்டாயமாக பதிவு செய்து கொள்ள வேண்டும். இந்த நிரந்தர பதிவு முறையில் பதிவு செய்த விண்ணப்பங்கள் பதிவு செய்த நாளிலிருந்து 5 ஆண்டு காலங்களுக்கு செல்லத்தக்கதாகும். அதன் பிறகு உரிய பதிவுக் கட்டணத்தைச் செலுத்தி புதுப்பித்துக் கொள்ள வேண்டும். நிரந்தர பதிவானது எந்த ஒரு பதவிக்கான விண்ணப்பமாக கருதப்படமாட்டாது. அதன் மூலம் பணியிடங்களுக்கு விண்னப்பிக்கலாம்.


வயதுவரம்பு:


பழங்குடியினர்/ பட்டியலின பிரிவினர், கணவனை இழந்த பெண்கள் ஆகியோருக்கு வயது வரம்பு இல்லை. ஏனையோர் 32 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.


கட்டண விவரம்:


பதிவுக் கட்டணமாக ரூ.150 -யும் தேர்வுக் கட்டணமாக ரூ.150-உம்  செலுத்த வேண்டும். 




எழுத்துத் தேர்வில் கேட்கப்படும் கேள்விகளுக்கான பாடத்திட்டம்:




விண்ணப்பிக்கும் முறை:


www.tnpsc.gov.in/ www.tnpscexams.in  என்ற வலைதள முகவரியில் தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்கவும்.


 ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.


 


 தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தினை நேரில் அல்லது 1800 419 0958 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணின் மூலம், அனைத்து வேலை நாட்களிலும் முற்பகல் 10.00 மணி முதல் பிற்பகல் 5.45 மணி வரைதொடர்பு கொள்ளலாம் ஒரு முறை பதிவு ஆன்லைன் விண்ணப்பம் தொடர்பான சந்தேகங்களுக்கு helpdesk@tnpscexamsin என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். பிற குறைதீர்/சந்தேகங்களுக்கு grievance.tnpsc@tn.gov.in என்ற முகவரிக்கு அனுப்பலாம் [விண்ணப்பதாரர்களுக்கான விதிமுறைகள் பத்தி2| V}ல்


 விண்ணப்பதாரர்களுத்தான தகவல் பரிமாற்றம் சான்றிதழ் சரிபார்ப்பு வாய்மொழித் தேர்வு - கலந்தாய்விற்கான நாள் மற்றும் நேரம் குறித்த தகவல்கள் எதும் விண்ணப்பதாரர்களுக்கு அஞ்சல் மூலமாக அனுப்பப்படமாட்டாது. இது குறித்த தகவல்கள் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்படும். மேற்கூறிய தகவல் விண்ணப்பதாரர்களுக்கு குறுஞ்செய்தி மின்னஞ்சல் ஆகியவற்றின் மூலம் மட்டுமே விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்கப்படும். குறுஞ்செய்தி/ மின்னஞ்சல் ஏதேனும் காரணங்களினால் சென்றடையாமல் கிடைக்கப்பெறாமல் இருப்பின் அதற்கு தேர்வாணையம் பொறுப்பாகாது என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 12.11.2022


கணினிவழித் தேர்வு நடைபெறும் நாள்: 8.2.2023


அறிவிப்பின் முழு விவரம் அறிய https://www.tnpsc.gov.in/Document/tamil/30_2022_INS_TAM.pdf என்ற லிங்கை கிளிக் செய்யவும்.