ஈரோடு மாவட்ட ஊராட்சி மற்றும் ஊராட்சி அலகில் காலியாகவுள்ள பல்வேறு பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 


பணி விவரம்



  • அலுவலக உதவியாளர் 

  • ஈப்பு ஓட்டுநர்

  • இரவுக் காவலர் 

  • பதிவுரு எழுத்தர் 


பணி இடம்


ஈரோடு, தளவாடி, சத்தியமங்கலம், பெருந்துறை, நம்புயூர், மொடைக்குறிச்சி, கோபிசெட்டிபாளையம், சென்னிமலை, பவானிசாகர், அந்தியூர், அம்மாபேட்டை ஆகிய ஊராட்சிகளில் உள்ள அலுவலகங்களில் காலியா உள்ள பணியிடங்கள் இந்த அறிவிப்பு மூலம் நிரப்பட உள்ளன. 


ஊதிய விவரம்



  • அலுவலக உதவியாளர் - ரூ.15,900- ரூ.50,000/-

  • ஈப்பு ஓட்டுநர் - ரூ.19,500 - ரூ.62,000/- 

  • இரவுக் காவலர் - ரூ.15,900- ரூ.50,000- 

  • பதிவுரு எழுத்தர் - ரூ.15,900- ரூ.50,400/- 


கல்வித் தகுதி



  • இதற்கு விண்ணப்பிக்க எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.

  • இரவுக் காவலர் பணிக்கு விண்ணப்பிக்க தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

  • பதிவுரு எழுத்தர் பணிக்கு விண்ணப்பிக்க 20-வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

  • ஈப்பு ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பிக்க 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 


வயது வரம்பு:


01.07.2023 அன்று 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.


விண்ணப்பிக்கும் முறை:


விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்னப்பத்தினை தேவையான ஆவணங்களுடன் அலுவலகத்திற்கு நேரில் சென்றோ அஞ்சல் மூலமாகவோ சமர்பிக்க வேண்டும்.


விண்ணப்ப படிவத்தினை தரவிறக்கம் செய்ய https://erode.nic.in/notice_category/recruitment/page/2/ - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும். 


விண்ணப்பிக்க வேண்டிய முகவரி


ஆணையாளர்,


ஊராட்சி ஒன்றியம்,


ஈரோடு.


ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திற்கும் விண்ணப்பிக்கும்போது அந்த முகவரியில் அஞ்சல் அனுப்ப வேண்டும். முகவரி குறித்த விவரங்களுக்கு https://erode.nic.in/notice_category/recruitment/page/2/- -என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும். 


விண்ணப்பிக்க கடைசி தேதி - 19.12.2023 மாலை 5.45 மணிக்குள்..


இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு https://erode.nic.in/notice_category/recruitment/ -  என்ற இணைப்பை க்ளிக் செய்து முழு விவரங்களை காணலாம். 


IDBI வங்கி வேலைவாய்ப்பு 


பிரபல தனியார் வங்கியான ஐ.டி.பி.ஐ. -யில் ( IDBI Bank ) உள்ள பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலம் 86 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் பற்றி காணலாம்.


பணி விவரம்



  • இணை பொது மேலாளர்  (Deputy General Manager (DGM) - (Grade D))

  • துணை பொது மேலாளர் (Asst. General Manager (AGM) - (Grade C) )

  • மேலாளர் ( Manager - (Grade B))


Audit-Information System (IS) , Fraud Risk Management, Risk Management, Corporate Credit/ Retail Banking (including Retail Credit),  Infrastructure Management Department (IMD) - Premises, Security உள்ளிட்ட பிரிவுகளில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 


கல்வித் தகுதி:



  • இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க பி.டெக், இளங்கலை பொறியியல், பி.சி.ஏ., பி.எஸ்.சி. கம்யூட்டர் சயின்ஸ், ஐ.டி.,  முதுகலை ஐ.டி., எம்.எஸ்.சி., எம்.சி.ஏ., பி.எஸ்.சி. கணிதம், Statistics, CA/MBA (Specialization in Banking/ Finance) /CFA/FRM/ICWA ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  • JAIIB/CAIIB/MBA என்ற படிப்புகளிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  • இதற்கு தேவையான கல்வித் தகுதிகள் குறித்து காண https://www.idbibank.in/pdf/careers/Detailed-Advt-Specialist-Officer-Spl-2024-25.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.  


வயது வரம்பு 


இணை பொது மேலாளர்  (Deputy General Manager (DGM) - (Grade D)) - 35- 45 வயது வரை


துணை பொது மேலாளர் (Asst. General Manager (AGM) - (Grade C) ) - 28 - 40 வயது வரை


மேலாளர் ( Manager - (Grade B)) - 25 -35 வயது வரை


ஊதிய விவரம்


இணை பொது மேலாளர்  (Deputy General Manager (DGM) - (Grade D)) - ரூ.76010/-


துணை பொது மேலாளர் (Asst. General Manager (AGM) - (Grade C) ) - ரூ.63,840/-


மேலாளர் ( Manager - (Grade B)) - ரூ.48,170/-




ஓராண்டுகால probation முடிந்தபிறகு பணி நிரந்தரம் குறித்து முடிவெடுக்கப்படும் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


பணி இடம்:


இதற்கு தேர்ந்தெடுக்கப்படுவர்கள் நாடு முழுவதும் உள்ள வங்கியின் அலுலகத்தில் நியமிக்கப்படுவர்.


விண்ணப்ப கட்டணம்




தேர்வு செய்யப்படும் முறை:


இந்தப் பணிகளுக்கு  நேர்முக தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். 


பெறப்படும் விண்ணப்பங்களில் இருந்து தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். அவர்களுக்கு நேர்காணல் நடைபெறும் தேதி, நேரம் உள்ளிட்ட விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும். 


விண்ணப்பிக்கும்  முறை: 


இதற்கு ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். https://www.idbibank.in/- என்ற லிங்கி கிள்க் செய்யவும்.


விண்ணப்பிக்கும் வழிமுறைகள்: 



  • முதலில் https://www.idbibank.in/pdf/careers/Detailed-Advt-Specialist-Officer-Spl-2024-25.pdf-என்ற இணைப்பில் பணி குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ளவும். 
    https://www.idbibank.in/ - என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.

  • பின்னர், “CAREERS/CURRENT OPENINGS” என்பதை க்ளிக் செய்யவும்.

  • Recruitment of Specialist Officer – 2024-25” பக்கத்திற்கு செல்லவும். 

  • “APPLY ONLINE” என்பதை க்ளிக் செய்யவும்.

  • பின் விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்ட தகவல்களை சரியாக பூர்த்தி செய்யவும்.


விண்ணப்பிக்க கடைசி தேதி - 25.12.2023


மேலும் கூடுதல் விவரங்களுக்கு.. https://www.idbibank.in/pdf/careers/Detailed-Advt-Specialist-Officer-Spl-2024-25.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.