நாமக்கல் மாவட்ட ஊராட்சி மற்றும் ஊராட்சி அலகில் காலியாகவுள்ள பல்வேறு பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 


பணி விவரம்


அலுவலக உதவியாளர் 


இரவுக் காவலர் 


பதிவுரு எழுத்தர் 


பணி இடம்


நாமக்கல், எலச்சிபாளையம், எருமப்பட்டி, கபிலர்மலை, கொல்லிமலை, மல்லசமுத்திரம்,மோகனூர்,  புது சத்திரம்,  பரமத்தி, பள்ளிபாளையம்,  நாமகிரிப்பேட்டை, திருச்செங்கோடு,  வெண்னந்தூர், ஆகிய ஊராட்சிகளில் உள்ள அலுவலகங்களில் காலியா உள்ள பணியிடங்கள் இந்த அறிவிப்பு மூலம் நிரப்பட உள்ளன. 


ஊதிய விவரம்


அலுவலக உதவியாளர் - ரூ.15,900- ரூ.58,100/- 


இரவுக் காவலர் - ரூ.15,900- ரூ.58,100/- 


பதிவுரு எழுத்தர் - ரூ.15,900- ரூ.58,500/- 


கல்வித் தகுதி


இதற்கு விண்ணப்பிக்க எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.


இரவுக் காவலர் பணிக்கு விண்ணப்பிக்க தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.


பதிவுரு எழுத்தர் பணிக்கு விண்ணப்பிக்க 20-வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 


வயது வரம்பு:


01.07.2023 அன்று 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.


விண்ணப்பிக்கும் முறை:


விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்னப்பத்தினை தேவையான ஆவணங்களுடன் அலுவலகத்திற்கு நேரில் சென்றோ அஞ்சல் மூலமாகவோ சமர்பிக்க வேண்டும்.


விண்ணப்ப படிவத்தினை தரவிறக்கம் செய்யhttps://namakkal.nic.in/notice_category/recruitment// - - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும். 


விண்ணப்பிக்க வேண்டிய முகவரி


ஆணையாளர்,


ஊராட்சி ஒன்றியம்,


நாமக்கல்.


ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திற்கும் விண்ணப்பிக்கும்போது அந்த முகவரியில் அஞ்சல் அனுப்ப வேண்டும். முகவரி குறித்த விவரங்களுக்கு https://namakkal.nic.in/notice_category/recruitment/ - -என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும். 


விண்ணப்பிக்க கடைசி தேதி - 22.12.2023 மாலை 5.45 மணிக்குள்..


இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு https://kallakurichi.nic.in/notice_category/recruitment/ -  என்ற இணைப்பை க்ளிக் செய்து முழு விவரங்களை காணலாம். 


மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு  கன்னியாகுமரி, நீலகிரி மாவட்டத்தில் முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் வரும் 16-ம் தேதி  (16.12.2023 - சனிக்கிழமை) நடைபெறுகிறது. 


நாளை மு.கருணாநிதி நூற்றாண்டு வேலைவாய்ப்பு முகாம் 


தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையால் மாநிலம் முழுவதும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடைபெற்று வருகின்றன.


அரியலூர்,கிருஷ்ணகிரி, மதுரை, சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து நாளை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. 


முன்னணி நிறுவனங்கள் 


இவ்வேலைவாய்ப்பு முகாமில்  பல்வேறு நகரங்களில் இருந்து ஏராளமான தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு காலிப்பணியிடங்களுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்யவுள்ளனர்.


யாரெல்லாம் பங்கேற்கலாம்?



  • இம்முகாமில் 10 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், பட்டதாரிகள். பட்டயப்படிப்பு படித்தவர்கள், பொறியியல் பட்டம், கணினி இயக்குபவர்கள், மென்பொருள் தயாரிப்பவர், தையல் கற்றவர்கள், பிட்டர், டர்னர், வெல்டர். சி.என்.சி. ஆப்ரேட்டர், போன்ற ஐ.டி.ஐ. தொழில் கல்வி பெற்றவர்கள் என அனைத்து வித தகுதியுள்ள நபர்கள் கலந்து கொண்டு வேலைவாய்ப்பு பெறலாம்.

  • இம்முகாமில் கலந்து கொள்ள அனுமதி இலவசம். இம்முகாமில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிகளுக்கான பதிவு, மாவட்ட தொழில் மையத்தின் தொழில்முனைவோர்களுக்கான ஆலோசனைகள், மாவட்ட முன்னோடி வங்கியின் வாயிலாக வங்கி கடன் வழிகாட்டுதல்கள் ஆகியன மேற்கொள்ளப்பட உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • வேலைவாய்ப்பு முகாமில் கலந்து வேலையளிக்கும் நிறுவனங்கள் மற்றும் வேலைநாடுநர்கள் www.tnprivatejobs.tn.gov.in - என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

  • வேலைதேடும் இளைஞர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக பதிவு செய்யலாம் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

  • ஆன்லைனில் பதிவு செய்ய இயலாதவர்கள் நேரடியாக முகாமில் கலந்து கொள்ளலாம். 


மதுரை வேலைவாய்ப்பு முகாம்


இ.எம்.ஜி. யாதவர் மகளிர் கல்லூரி,


திருப்பாலை,


மதுரை.


கிருஷ்ணகிரி வேலைவாய்ப்பு முகாம்


அரசு பாலிடெக்னிக் கல்லூரி, கிருஷ்ணகிரி


சிவகங்கை வேலைவாய்ப்பு முகாம்


O.V.C Higher Secondary School,


Manamadurai ,


Near Old Bus Stand,


Manamadurai Town Rd,


Manamadurai, Tamil Nadu 630610


அரியலூர் வேலைவாய்ப்பு முகாம்


தா. பழூர், அரசினர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெறும்


வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் நாள்:  16.12.2023


வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் நேரம்: காலை  09.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி