ஈரோடு மாவட்டத்தில் செயல்படுத்தப்பட உள்ள நகர்புற நலவாழ்வு மையங்களில் காலியாக உள்ள பல்வேறு பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக பணிபுரிவதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்படுள்ளது. இதற்கு தேவையான தகுதிகள் என்னென்ன என்பவைகள் பற்றி காணலாம். இதன் மூலம் 73 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.


பணி விவரம்: 



  • Medical Officer - 18

  • Quality Manager - 01

  • SHN/ Urban Health Manager - 02

  • Health Inspector GR II - 19

  • Dental Assistant- 07

  • LMHC Attender - 01

  • MMU Attender - 01

  • MMU Driver - 01

  • Supportive Staff - 18

  • Mental Health Office Assistant-01

  • Trauma Registry Assistant (Staff Nurse) - 02

  • MLHP- 01

  • Ophthalmic Assistant - 01


மொத்த பணியிடங்கள் -73


கல்வித் தகுதி :



  • மருத்துவ அலுவலர், க்வாலிட்டி மேனேஜர் பணிகளுக்கு எம்.பி.பி.எஸ். படித்திருக்க வேண்டும். மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும். 

  • நகர்புற சுகாதார மேலாளர் பணிக்கு எம்.எஸ்.சி. நர்ஸிங் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது பி.எஸ்.சி நர்ஸிங் படிப்பில் தேர்ச்சி பெற்றிருப்பதோடு மூன்று ஆண்டுகால பணி அனுபவம் இருக்க வேண்டும். 

  • ஹெல்த் இன்ஸ்பெக்டர் பணிக்கு தமிழ் மொழியை பாடமாக கொண்டு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இரண்டு ஆண்டு கால பணி அனுபவம் இருக்க வேண்டும். 

  • LMHC Attender, MMU Attender, MMU Driver,Supportive Staff போன்ற பணிகளுக்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.


ஊதிய விவரம்:



  • Medical Officer - ரூ.60,000/-

  • Quality Manager -ரூ.60,000/-

  • SHN/ Urban Health Manager -ரூ.25,000/-

  • Health Inspector GR II - ரூ.14,000/-

  • Dental Assistant- ரூ.10,395/-

  • LMHC Attender - ரூ.8,500/-

  • MMU Attender -ரூ.8,500/-

  • MMU Driver - ரூ.9,000/-

  • Supportive Staff - 8,500/

  • Mental Health Office Assistant-10,000/-

  • Trauma Registry Assistant (Staff Nurse) - 14,000/-

  • MLHP- 18,000/-

  • Ophthalmic Assistant - 10,500/-


வயது வரம்பு: 


மருத்துவ அலுவலர், சுகாதார உதவியாளர் மற்றும் மேலே குறிப்பிட்டுள்ள பணிக்கு விண்ணப்பிக்க வயது வரம்பு அரசு விதிகளுக்குட்பட்டது. 


தேர்வு செய்யும் முறை: 


விண்ணப்பதாரர்களில் இருந்து தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். நேர்காணல் அடிப்படையில் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்.


எப்படி விண்ணப்பிப்பது? 


விண்ணப்பப்படிவத்தைப் பூர்த்தி செய்து அஞ்சல் மூலம் அனுப்பவது அல்லது அலுவலகத்திற்கு சென்று நேரடியாக விண்ணப்பிக்கலாம். 


விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்ய https://erode.nic.in/notice_category/recruitment


கவனிக்க..


இந்தப் பணி எந்த காலத்திலும் நிரந்தரம் செய்யப்பட மாட்டது என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


உள்ளூரில் வசிப்பவர்கள் மட்டும் இதற்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


அஞ்சல் அனுப்ப வேண்டிய முகவரி 


The Executive Secretary / Deputy Director of Health Services,


District Health Society,


Deputy Director of Health Services, Erode District-638009,


சந்தேகங்களுக்கு தொடர்பு கொள்ள - 0424-2431020.
 


விண்ணப்பிக்க கடைசி நாள் - 24.03.2023 மாலை 5 மணி வரை 


இந்த வேலைவாய்ப்பு தொடர்பான கூடுதல் தகவலுக்கு https://drive.google.com/file/d/15qnW7iTKKvbV--REjXZgKQz703rA1E1O/view- என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.


ஆல் தி பெஸ்ட்!