நாட்டின் பொதுத் துறை நிறுவனமான பாங்க் ஆஃப் பரோடா (Bank of Baroda) வங்கியில் காலியாக உள்ள ’ Acquisition Officer’ பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இதற்கு விண்ணப்பிக்க வரும் நாளை மறுநாள் (மார்ச்,14) கடைசி நாளாகும்.
பணி விவரம்:
Acquisition Officer
மொத்த பணியிடங்கள்: 500
பணியிட விவரம்:
கல்வித் தகுதி:
இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து எதாவது ஒரு துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தனியார், அரசு வங்கிகளில் ஓராண்டுகால பணி அனுபவம் இருக்க அவேண்டும்.
வயது வரம்பு:
இதற்கு விண்ணப்பிக்க 28 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை:
ஆன்லைன் எழுத்துத் தேர்வில் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் நேர்காணுலுக்கு அழைக்கப்படுவார்கள். இது ஒப்பந்த அடிப்படையிலான பணி என்றும் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு செயல் திறன் அடிப்படையில் பணி காலம் நீட்டிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எழுத்துத் தேர்வு பாடத்திட்டம்.
விண்ணப்ப கட்டணம்:
Intimation Changers - பொதுப் பிரிவினர் மற்றும் OBC வகுப்பினருக்கு ரூ.600 ஆன்லைனில் செலுத்த வேண்டும். பட்டியலின / பழங்குடியின பிரிவினர், முன்னாள் இராணுவத்தினர், PWD மற்றும் மகளிர் ஆகியோருக்கு ரூ.100 கட்டணம் ஆகும். இந்த தொகை ஆன்லைனில் மட்டுமே செலுத்த வேண்டும்.
ஊதிய விவரம்:
இந்தப் பணிகளுக்கான மாத ஊதியம், கல்வித் தகுதி, பணி அனுபவம் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 14.02.2023
https://www.bankofbaroda.in/career/current-opportunities என்ற லிங்க் மூலம் விண்ணபிக்கலாம்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு விவரம் அறிய https://www.tamilanguide.in/2023/02/bank-of-baroda-recruitment-2023-500-ao.html - லிங்கை கிளிக் செய்யவும்.
மேலும் வாசிக்க..
TN Exam Tips: பொதுத் தேர்வு எழுத இருக்கும் மாணவர்களா நீங்கள்? இதை முதலில் கட்டாயம் செய்யுங்கள்!
JEE Mains 2023 Session 2: ஜேஇஇ மெயின் தேர்வு; விண்ணப்பிக்க இன்றே கடைசி- எப்படி? முழு விவரம்