திருவாரூரில் செயல்பட்டுவரும் மத்திய பல்கலைக்கழகத்தில் Public relation officer, Assistant Registar போன்ற ஆசிரியரல்லாத பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியு்ளது. எனவே ஆர்வமும், தகுதியும் உள்ள நபர்கள் வருகின்ற மார்ச் 29 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.


திருவாரூரில் அமைந்துள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழத்தில் பல்வேறு துறைகளின் கீழ் பலர் பணியாற்றிவருகின்றனர். இந்நிலையில் ஆசிரியர் இல்லாத பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே  இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கானத் தகுதிகள்? விண்ணப்பிக்கும் முறை? குறித்து இங்கே  தெரிந்துகொள்வோம்.





திருவாரூர் மத்திய பல்கலைக்கழக பணிக்கானத் தகுதிகள்:


பணியிட விபரங்கள்:


Public Relations office – 1


வயது வரம்பு – விண்ணப்பதாரர்கள் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.


கல்வித்தகுதி – 55 சதவிகித மதிப்பெண்களுடன் Journalism and mass communication துறையில் முதுநிலைப்பட்டம் பெற்றதோடு 5 ஆண்டுகள் பணி முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


ஹிந்தி மொழியில் அறிவுத்திறன் பெற்றிருக்க வேண்டும்.


Assistant Registar – 1


வயது வரம்பு – விண்ணப்பதாரர்கள் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்


கல்வித்தகுதி – விண்ணப்பதாரர்கள் ஏதாவதொரு துறையில் முதுநிலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும்.


Section office – 1


வயது வரம்பு – 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.


கல்வித்தகுதி – ஏதாவதொரு துறையில் இளநிலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும். Computer operator, Nothing and Drafting ல அறிவுத்திறன் பெற்றிருக்க வேண்டும்.


Personal Assistant – 2


வயது வரம்பு – விண்ணப்பதாரர்கள் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.


கல்வித்தகுதி – விண்ணப்பதாரர்கள் ஏதாவதொரு துறையில் இளநிலைப்பட்டப்படிப்புடன் சுருக்கெழுத்தில், ஆங்கிலம், இந்தியில் நிமிடங்களுக்கு 100 வார்த்தைகள் எழுதவும்.


இதோடு தட்டச்சில் ஆங்கிலம், இந்தியில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் கொண்டிருக்க வேண்டும்.


விண்ணப்பிக்கும் முறை:


விண்ணப்பதாரர்கள் https://cutnnt.samarth.edu.in/index.php/site/login என்ற இணையதளப்பக்கத்தின் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.


பின்னர் விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்து அடிப்படை விபரங்களையும் சரியாக பூர்த்தி செய்துக்கொள்ள வேண்டும்.


பின்னர் இந்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுக்க வேண்டும். பின்னர் கேட்கப்பட்டுள்ள அனைத்து  ஆவணங்களையும் இணைந்து அஞ்சல் வழியாக அனுப்ப வேண்டும்.


அனுப்ப வேண்டிய முகவரி :


The Joint Register,


Recruitment Cell,


Central university of Tamilnadu,


Thiruvarur- 610 005


TamilNadu.


விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய கடைசி தேதி – மார்ச் 29,2022


விண்ணப்பக்கட்டணம்:


பொது, எஸ்சி, எஸ்டி, ஒபிசி பிரிவினருக்கு ரூபாய் 750ம்,  மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு ரூபாய் 500 விண்ணப்பக்கட்டணமாக செலுத்த வேண்டும்.


தேர்வு முறை:


விண்ணப்பதாரர்கள் எழுத்து மற்றும் நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.


மேலும் இந்த வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் விபரங்களை https://cutn.ac.in/wp-content/uploads/2022/02/NT_ADVT-NON_Teaching_18022022.pdf என்ற இணையதளப்பக்கத்தின் வாயிலாக முழுமையாக தெரிந்துக்கொள்ளலாம்.