வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ் இயங்கி வரும் மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், உளவியல் பகுப்பாய்வு சோதனைகளுடன் கூடிய வழிகாட்டுதல், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தொழில்நெறி வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைகள் வழங்குதல், போட்டித் தேர்வுகளுக்கான நேரடி பயிற்சி வகுப்புகள் மற்றும் மாதிரித் தேர்வுகள் நடத்துதல், கல்வி தொலைக்காட்சி வாயிலாக போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்துதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

Continues below advertisement

என்னென்ன அம்சங்கள்?

இதனில் போட்டி தேர்வுகளுக்கு, திறமையான, அனுபவமிக்க பயிற்றுநர்களைக் கொண்டு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் பாடக்குறிப்புகள், தினசரி, மாத இதழ்கள், முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் ஆகியவை வழங்கப்படுவதுடன் பாடவாரியான துணைத் தேர்வுகள், மாதிரித் தேர்வுகள் ஆகியவையும் நடத்தப்பட்டு வருகின்றன.

மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜுன் 1 ஆம் தேதி முதல் பின்வரும் போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

Continues below advertisement

பயிற்சி வகுப்பு - TNPSC CTS / Group I, II, & IV நேரடி பயிற்சி வகுப்பு Offline Class

நாள் மற்றும் நேரம்-  திங்கள், புதன், வெள்ளி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை

பயிற்சி வகுப்பு - RRB ALP, SSC CGL RRB - Group D நேரடி பயிற்சி வகுப்பு Offline C- lass

நாள் மற்றும் நேரம்-  செவ்வாய் மற்றும் வியாழன் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை

பயிற்சி வகுப்பு - RRB ALP, SSC - CGL RRB - Group D இணையவழி பயிற்சி வகுப்பு - Online Class

நாள் மற்றும் நேரம்-  செவ்வாய் மற்றும் வியாழன் மாலை 6.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை

பங்கேற்பது எப்படி?

மேற்காணும் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் இப்பயிற்சி வகுப்பில் நேரடியாக கலந்து கொண்டு பயனடையுமாறு மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் முதன்மை செயல் அலுவலர் மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் இயக்குநர் டாக்டர்.சி.பழனி தெரிவித்துள்ளார்.

எனவே, விருப்பமுள்ள போட்டித் தேர்வர்கள் தங்களது ஆதார் அட்டை நகல் மற்றும் புகைப்படத்துடன் (Passport Size Photo) கீழ்க்கண்ட முகவரியில் நேரில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இதையும் வாசிக்கலாம்: NEET UG 2026: நீட் தேர்வு ஹால் டிக்கெட்டை டவுன்லோடு செய்ய முடியாமல் மாணவர்கள் அவதி- மாற்று வழிகள் என்னென்ன?

அலுவலக முகவரி:

மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையம், A-28, முதல் தளம், டான்சி கட்டிடம்,

திரு.வி.க. தொழிற்பேட்டை,

கிண்டி, சென்னை-32.

தொலைபேசி எண்: 044-22500134

இவ்வாறு முதன்மை செயல் அலுவலர்/ இயக்குநர் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை தெரிவித்துள்ளார்.