2026ஆம் ஆண்டுக்கான நீட் மறு தேர்வு ஹால் டிக்கெட் நேற்று (ஜூன் 14) இரவு வெளியான நிலையில், அதை டவுன்லோடு செய்வதில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பப் பிரச்சினையால் மாணவர்கள் அவதியில் ஆழ்ந்துள்ளனர். இந்த நிலையில் ஹால் டிக்கெட்டைப் பெற என்னென்ன மாற்று வழிகள் உள்ளன என்று கீழே காணலாம்.

Continues below advertisement

வெளியான ஹால் டிக்கெட்

என்டிஏ எனப்படும் தேசிய தேர்வு முகமை நடத்தும் நீட் மறுதேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. ஆனால், சர்வர் முடக்கம், லோடிங் பிரச்சினை, blank லாகின் ஸ்க்ரீன் பக்கம்  மற்றும் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இதனைப் பதிவிறக்கம் செய்ய முடியாமல் மாணவர்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

ஹால் டிக்கெட் வெளியான தகவல் அறிந்ததும், ஒரே நேரத்தில் ஏராளமான மாணவர்கள் இணையதளத்தை அணுகியதால் கடுமையான சர்வர் நெரிசல் ஏற்பட்டது. இதனால், exams.nta.ac.in என்ற NTA-வின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கம் முடங்கியது. பல மாணவர்களுக்கு இணையப்பக்கம் திறக்காமலும், எரர் செய்திகளும் வந்த வண்ணம் உள்ளன.

Continues below advertisement

கிடைக்காத ஹால் டிக்கெட்

தேர்வு நெருங்கும் நிலையில் ஹால் டிக்கெட் கிடைக்காததால் மாணவர்கள் பதற்றமடைந்துள்ளனர். இந்நிலையில், அதிகாரப்பூர்வ இணையதளம் முடங்கியிருந்தாலும், ஹால் டிக்கெட்டைப் பெறுவதற்கு வேறு சில மாற்று வழிகள் இருப்பதை மாணவர்கள் தெரிந்துகொள்வது அவசியமாகும்.

ஹால்டிக்கெட்டைப்பெறமாற்றுவழிகள்:

  1. டிஜிலாக்கர் (DigiLocker): மாணவர்கள் டிஜிலாக்கர் இணையதளம் அல்லது செயலியில் உள்நுழைந்து ஹால் டிக்கெட்டைப் பெறலாம்.

இதில் 'National Testing Agency' என்பதைத் தேர்ந்தெடுத்து, நீட் தேர்வுப் பகுதியைக் கிளிக் செய்ய வேண்டும்.

பின்னர் NEET Admit Card 2026 என்ற தெர்வை க்ளிக் செய்து, விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியைக் கொடுத்தால் ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்யலாம்.

  1. உமாங்செயலி (UMANG App):

அரசின் ஒருங்கிணைந்த சேவைகளுக்கான உமாங் செயலி மூலமாகவும் நீட் ஹால் டிக்கெட்டைப் பெற முடியும்.

உமாங் செயலியில் உள்நுழைந்து NTA சேவைகளைத் தேர்ந்தெடுத்து, NEET Admit Card 2026 என்ற பக்கத்தை தேர்வு செய்யவும்.

அதில் தகுந்த விவரங்களை அளிப்பதன் மூலம் நுழைவுச்சீட்டை எளிதாகப் பெறலாம்.

  1. மின்னஞ்சல் (Email):

மாணவர்கள் விண்ணப்பிக்கும்போது கொடுத்த, பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு NTA நேரடியாக ஹால் டிக்கெட்டை அனுப்பும் நடைமுறையும் உள்ளது. எனவே, உங்களின் இன்பாக்ஸ் (Inbox) மற்றும் ஸ்பேம் (Spam) ஃபோல்டர்களைத் தவறாமல் சரிபார்க்கவும்.

இந்த மாற்று வழிகளிலும் ஹால் டிக்கெட்டைப் பெற முடியவில்லை என்றால், மாணவர்கள் NTA-வின் உதவி எண்களையோ அல்லது neet@nta.ac.in என்ற மின்னஞ்சல் முகவரியையோ உடனடியாகத் தொடர்புகொண்டு தெரிவிக்கலாம். இணையதள கோளாறு விரைவில் சரிசெய்யப்படும் என்பதால், மாணவர்கள் எவ்வித அச்சமுமின்றி மாற்று வழிகளைப் பின்பற்றலாம்.