மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருகின்ற பிப்ரவரி 7-ம் தேதி நடைபெறும் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்று பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.

மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் 

மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த தனியார்த்துறையில் வேலைதேடும் மாற்றுத்திறனாளி இளைஞர்கள் பயடையும் வகையில் மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் லையம் மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் இணைந்து மயிலாடுதுறையில் உள்ள புதிய மாவட்ட ஆட்சியராகத் தரை தளத்திலுள்ள மக்கள் குறைதீர் நாள் கூட்ட அரங்கில் எதிர் வரும் 07-02-2025 வெள்ளிக்கிழமை அன்று காலை 9 மணிக்கு தொடங்கி மதியம் 3 மணி வரை மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்கான சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வருகைதர உள்ள நிறுவனங்கள் 

இந்த முகாமில் மயிலாடுதுறை மாவட்டம் உட்பட்ட பிற மாவட்டங்களில் இருந்தும் தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனத்தில் உள்ள காலி பணியிடங்களுக்காக மாற்றுத்திறனாளி வேலைநாடுநர்களை தேர்வு செய்ய உள்ளனர். மேலும் இம்முகாமில் 18 வயது முதல் 35 வயதுக்கு உட்பட்ட, 5-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்தோர், டிப்ளமோ, ஐடிஐ, பி.இ உட்பட இதர பட்டதாரிகள் இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பணிவாய்ப்பு பெறலாம். 

Thiruparankundram: திருப்பரங்குன்றத்தில் பிரச்னை பண்றது யாரு.? கலெக்டர் என்ன சொல்றாங்கன்னு பாருங்க...

பல்வேறு பயன்கள் 

மேலும் இம்முகாமில் திறன் பயிற்சி, சுயத்தொழில் தொடங்க வங்கிக் கடன் வசதி, அயல்நாட்டு வேலைவாய்ப்பு மற்றும் அரசு போட்டித்தேர்வுகள் குறித்த வழிகாட்டுதலும் வழங்கப்படவுள்ளது. எனவே விருப்பமுள்ள மாற்றுத்திறனாளி வேலைநாடுநர்கள் சுயவிவர அறிக்கை, கல்விச்சான்றுகள் ஆதார் அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், முன் அனுபவம் ஏதும் இருப்பின் அதற்கான சான்றிதழ் நகல்களுடன் கலந்துகொண்டு பயன்பெறவும் வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Divya Sathyaraj : “எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக நடிகர் சத்யராஜீன் மகள் போட்டி?” தொண்டாமுத்தூருக்கு இப்போதே டார்கெட்..!

நிறுவனங்களுக்கும் அழைப்பு 

மேலும் இம்முகாமில் கலந்துகொண்டு மாற்றுத்திறனாளி இளைஞர்களை தங்கள் நிறுவனத்திற்கு பணியமர்த்த விருப்பமுள்ள வேலையளிப்போர் கலந்து கொண்டு தங்களுக்குத் தேவைப்படும் பணியாளர்களைத் தேர்வு செய்துகொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இம்முகாமில் அதிக அளவில் மாற்றுத்திறனாளி இளைஞர்கள் கலந்துகொள்ள ஏதுவாக, மயிலாடுதுறை வட்டார வளர்ச்சி அலுவலர் (7402607454) சீர்காழி வட்டார வளர்ச்சி அலுவலர் (7402607458), செம்பனார்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலர் (7402607460), குத்தாலம் வட்டார வளர்ச்சி அலுவலர் (7402607456). கொள்ளிடம் வட்டார வளர்ச்சி அலுவலர் 748260746230 ஆகியோரில் தங்கள் பகுதிக்கு உட்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலலரத் தொடர்புகொண்டு சிறப்புத் தனியார்த்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ள மாவட்ட ஆட்சியரகத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்புப் பேருந்து வசதியை பயன்படுத்திக்கொள்ளுமாறு அறிவுத்தப்பட்டுள்ளது.

Vidaamuyarchi Vijay Fans: ”நமக்கு எதுக்குபா வம்பு” - அஜித்தின் விடாமுயற்சி ரிலீஸ், ஸ்லீப் மோடில் விஜய் ரசிகர்கள் - அனில் Vs ஆமை ஓவரா

தொடர்பு எண் 

மேலும் தனியார்த்துறை நிறுவனங்களில் வேலைதேடும் மயிலாடுதுறை மாவட்டத்தைச்சேர்ந்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இம்முகாமில்ளு நேரில் கலந்து கொண்டு பயனடையுமாறு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஏ.மகாபாரதி தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு 04364299790 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.