திருப்பரங்குன்றம் விவகாரம் 144 தடை உத்தரவு வரைக்கும் போய், ரொம்பவே பரபரப்பான விஷயமா மாறியிருக்கு. இந்த நேரத்துல, அங்க பிரச்னைக்கு காரணமே இவங்கதான் அப்படீன்னு, மாவட்ட ஆட்சியர் தெளிவா ஒரு அறிக்கை வெளியிட்டு இருக்காங்க. அது என்ன சொல்லி இருக்காங்கன்னு பார்க்கலாம்.
திருப்பரங்குன்றம் விவகாரம்
திருப்பரங்குன்றம் மலை மேல இருக்கற தர்காவுல, கந்தூரி (ஆடு பலியிடுதல்) கொடுக்குறது தொடர்பா பிரச்னை ஆரம்பமாச்சு. இது தொடர்பா பலகட்ட பேச்சுவார்த்தை நடந்துட்டு இருந்தப்போ, இந்து முன்னணியினர் பிரச்னைக்குள்ள வந்தாங்க. அவங்க மலையோட புனிதத்த காப்பாத்தணும்னு சொல்லி, ஆர்ப்பாட்டம் நடத்துறதுக்கு அனுமதி கேட்டாங்க. ஆனா, காவல்துறை அனுமதி மறுத்த நிலையில், தடைய மீறி ஆர்ப்பாட்டம் நடத்தப்போறதா அறிவிச்சாங்க.
இந்த நிலையில, கடந்த 3-ம் தேதி காலைல இருந்து, 4-ம் தேதி இரவு வரைக்கும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுச்சு. அந்த தடைய மீறி போராட்டம் நடத்த முயற்சி பண்ணவங்கள, அங்கங்க காவல்துறையினர் கைது செஞ்சாங்க. இதைத் தொடர்ந்து, நீதிமன்றம் வரைக்கும் போன இந்து முன்னணி அமைப்பினர், அமைதியான முறைல போராட்டம் நடத்த அனுமதி வாங்குனாங்க.

மலைப்பகுதியில் ஏற்பட்ட அசாதாரண சூழல்
திருப்பரங்குன்றம் மலை விவகாரத்த, ஆரம்பத்துல இருந்தே மாவட்ட நிர்வாகமும், காவல்துறையினரும் அலட்சியமா கையாண்டதால், திருப்பரங்குன்றத்துல, இந்து-இஸ்லாமியர் இடையே அசாதரண சூழல் உருவாகும் நிலை ஏற்பட்டு, மாவட்டம் முழுதும் பதற்றத்த உருவாக்குச்சு. அதோட, திருப்பரங்குன்றம் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் வாழ்வாதரமும், இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டதோடு, தைப்பூச திருவிழாவில் கலந்துகொள்ளும் பக்தர்களுக்கும், சிக்கந்தர் தர்ஹாவிற்கு செல்லும் பக்தர்களுக்கும் மன உளைச்சலை ஏற்படுத்துச்சு. இதுக்கு இடைல, பாதுகாப்பு கருதி, மலை மேல இருக்கற காசி விஸ்வநாதர் கோயிலுக்கு போக தடை விதிக்கப்பட்டு, அதுக்கு அப்புறமா அந்த தடைய நீக்குனாங்க.
மாவட்ட ஆட்சியர் அறிக்கை
இப்படிப்பட்ட சூழல்ல, மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா ஒரு அறிக்கைய வெளியிட்டுருக்காங்க. அதுல, திருப்பரங்குன்றம் கிராம பகுதியை சேர்ந்த அனைத்து மதத்தினரும், ஒற்றுமையாவும், மதசார்பின்றியும், மத நல்லிணக்கத்தை பேணும் வகையிலும் வாழ்ந்துட்டு இருக்கறதா சொல்லியிருக்காங்க. அதோட, வெளியூரை சேர்ந்த ரெண்டு அமைப்ப சேர்ந்தவங்கதான், அப்பகுதி மக்களோட அமைதிக்கு பங்கம் விளைவிக்க முயற்சிக்கறதாவும், அத கட்டுப்படுத்தி, பொது அமைதியையும், மத நல்லிணக்கத்தையும் பேண எல்லா நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுவர்றதாவும் மாவட்ட ஆட்சியர் சொல்லியிருக்காங்க.