DRDO Recruitment 2022:
இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் (டி.ஆர்.டி.ஓ. - DEFENCE RESEARCH & DEVELOPMENT ORGANISATION) காலியாக உள்ள Posts under Admin & Allied (A&A) Cadre பிரிவில் 1,061 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியிருந்தது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள். இதற்கு விண்ணப்பிக்க என்னென்ன தகுதிகள் வேண்டும் என்று இக்கட்டுரையில் காணலாம்.
பணி தொடர்பான விவரங்கள்:
பணி விவரம்:
Junior Translation Officer (JTO) – 33
Stenographer Grade-I (English Typing) – 215
Stenographer Grade-II (English Typing) – 123
Administrative Assistant ‘A’ (English Typing) – 250
Administrative Assistant ‘A’ (Hindi Typing) – 12
Store Assistant ‘A’ (English Typing) – 134
Store Assistant ‘A’ (Hindi Typing) – 04
Security Assistant ‘A’ – 41
Vehicle Operator ‘A’ – 145
Fire Engine Driver ‘A’ – 18
Fireman – 86
மொத்த பணியிடங்கள்: 1,061
கல்வித் தகுதி:
ஜூனியர் மொழிபெயர்ப்பு அதிகாரி பணிக்கு ஹிந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழியில் முதுலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலத்தில் இருந்து ஹிந்திக்கு மொழிபெயர்க்கும் திறன் கொண்டிருக்க வேண்டும்.
stenographer Grade-I(English) பணிக்கு விண்ணப்பிக்க இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலத்தில் சுருக்கெழுத்தில் நிமிடத்திற்கு 100 வார்த்தைகள் எழுதும் திறன் மற்றும் நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் என்ற வேகத்தில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
Stenographer Grade-II(English) பணிக்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆங்கில மொழி சுருக்கெழுத்தில் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் எழுதும் திறன் மற்றும் நிமிடத்திற்கு 50 வார்த்தைகள் என்ற வேகத்தில் தட்டச்சு செய்ய தெரிந்திருக்க வேண்டும். கல்விச் சான்றிதழ் அவசியம்.
Administrative Assistant(English/Hindi) பணிக்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்தியில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் அல்லது ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் அவசியம்.
Store Assistant 'A' (Hindi/English) பணிக்கு பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் இந்தி தட்டச்சில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் டைப் செய்வது அல்லது ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் வேண்டும்.
Security Assistant 'A' பணிக்கு பிளஸ்-2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நல்ல உடற்தகுதி பெற்றிருக்க வேண்டும். மருத்துவ சான்றிதழ் அவசியம்.
Vehicle Operator'A' பணிக்கு விண்ணப்பிக்க பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மோட்டர், மெஷின் செயல்படும் தொழில்நுட்பம் குறித்து தெரிந்திருக்க வேண்டும். மூன்று ஆண்டுகளுக்கு மோட்டர் கார் இயக்கிய பணி அனுபவம் வேண்டும்.
Fireman பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Fire Engine Driver பணிக்கு விண்ணப்பிக்க பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், கனரக வாகன ஓட்டுநர் உரிமம் இருப்பது அவசியம். நல்ல உடற்தகுதி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
Junior Translation Officer 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். மற்ற பணி இடங்களுக்கு விண்ணப்பிக்க 27 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
ஊதிய விவரம்:
Junior Translation Officer : மாதம் ரூ.35,400 முதல் ரூ. 1,12,400 வரை
Stenographer Grade-I(English) : மாதம் ரூ.25,500 முதல் ரூ.81,100 வரை
பணி: Stenographer Grade-II(English) : ரூ.25,500 முதல் ரூ.81,100 வரை
Administrative Assistant(English/Hindi) : மாதம் ரூ.19,900 முதல் ரூ. 81,100 வரை
Store Assistant 'A' (Hindi/English) : ரூ.19,900 முதல் ரூ. 63,200 வரை
Security Assistant 'A' : மாதம் ரூ.19,900 முதல் ரூ.63,200 வரை
: Vehicle Operator'A' : மாதம் ரூ.19,900 முதல் ரூ. 63,200 வரை
Fireman/Fire Engine Driver : மாதம் ரூ.19,900 முதல் ரூ. 63,200 வரை
தேர்வு செய்யப்படும் முறை:
டி.ஆர்.டி.ஓ. -வின் ஆன்லைன் எழுத்துத் தேர்வு, உடற்தகுதி தேர்வு, தொழிற்திறன் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர் என்று அறிவிப்பில் குறிப்பிடப்படுள்ளது.
தேர்வு:
எழுத்துத் தேர்வு பாடத்திட்டம்:
தேர்வு இரண்டு கட்டங்களாக நடத்தப்படும்.
முதல் கட்ட தேர்வு நடைபெறும் இடம்: தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர் ஆகிய நகரங்கள்.
விண்ணப்பக் கட்டணம்:
ரூ.100. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். பழங்குடியின. பட்டியலின பிரிவினர், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் ஆகியோருக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் இருந்த்உ விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
எப்படி விண்ணப்பிப்பது:
www.drdo.gov.inஎன்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
தொடர்புக்கு:
The Director
Centre for Personnel Talent Management (CEPTAM)
Defence R&D Organisation (DRDO),
Ministry of Defence Metcalfe House,
Civil Lines, Delhi-110 054
உதவி எண்: 011-23882332/33/34, 23819217
இ-மெயில்: helpdesk@ceptam10.com
இணையதள முகவரி- www.drdo.gov.in
அறிவிப்பின் முழு விவரத்திற்கு https://drive.google.com/file/d/1TtYjvNpmbDN14dhapLZMu9mYRWiQYnAQ/view என்ற லிங்கை கிளிக் செய்யவும்.
முக்கிய நாட்கள்:
விண்ணப்பிக்க கடைசி நாள்: 07.12.2022