தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத 125 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே ஆர்வமும், தகுதியும் உள்ள நபர்கள் வருகின்ற ஜனவரி 19-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக்கொள்ளவும்.


டாக்டர் அம்பேத்கார் சட்டப்பல்கலைக்கழகம் கடந்த 1996 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இது தமிழ்நாட்டுப்பல்கலைக்கழங்களுள் ஒன்றாக விளங்கிவருகிறது. சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரி, மதுரை, திருச்சி, நெல்லை, கோவை, சேலம் ஆகிய இடங்களில் சட்டக்கல்லூரிகளை இணைத்து செயல்பட்டுவருகிறது. இப்பல்கலைக்கழகத்தில்  பல்வேறு துறைகளின் கீழ் பலர் பணியாற்றிவரும் நிலையில், ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே இப்பணியிடங்களுக்கானத் தகுதி? விண்ணப்பிக்கும் முறை? குறித்து இங்கே தெரிந்துகொள்வோம்.



அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகத்தில் காலிப்பணியிட விபரங்கள்:


சட்டக்கல்லூரிப் பேராசிரியர் பணியிடங்கள்:


Cyber space law and justice – 1


Maritime law – 1


Assistant professor பணியிடங்கள்


Business law – 5


Constitutional law – 5


Intellectual property law -7


International law and organisation – 5


Environment law and legal order – 6


Criminal law and criminal justice administration – 6


Labour law – 3


Administrative law – 2


Human rights and duties education – 4


Maritime law – 4 உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


அதேபோன்று ஆசிரியர் அல்லாத பணியிடங்களான ஜூனியர் அசிஸ்டன்ட், நூலக உதவியாளர், ரெக்கார்டு கிளர்க், அலுவலக உதவியாளர், ஸ்டோர் கீப்பர், உதவியாளர் என 50 பணியிடங்கள் காலியாக உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கல்வித்தகுதி:


மேற்கண்ட பணியிடங்களுக்கு ஏற்றவாறு கல்வித்தகுதி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


8,10 மற்றும் 12-வது தேர்ச்சிப்பெற்றிருக்க வேண்டும்.


அங்கீகரிக்கப்பட்டப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை மற்றும் முதுகலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும்.


வயது வரம்பு :


விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 57 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.


விண்ணப்பிக்கும் முறை:


https://www.tndalu.ac.in/recruitment.html என்ற இணையப்பக்கத்திற்குச் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.


விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் சரியாக பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் இணைத்து அனுப்பவேண்டும்.


பின்னர் விண்ணப்பப் படிவத்தை பிரிண்ட அவுட் எடுத்து சட்டப்பல்கலைக்கழக முகவரிக்கு அனுப்ப வேண்டும்.



அனுப்பவேண்டிய முகவரி:


The registrar, The tamilnadu Dr. Ambedkar law university,


Poompozhil, No5,


DGS Dinakaran salai, Chennai – 600028.


விண்ணப்ப கட்டணம்:


விண்ணப்பதாரர்கள் (Demand draft) மூலம் விண்ணப்பக்கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.


பொதுப்பிரிவினருக்கு ரூ.1180 மற்றும் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.590


ஆசிரியர் இல்லாத பணியிடங்களுக்கான விண்ணப்பக்கட்டணம்


எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினருக்கு ரூ. 295. மற்றும் பொதுப்பிரிவினருக்கு ரூ. 590 என நிர்ணயம்.


தேர்வு முறை:


மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்கும்  விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.


இந்த வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் விபரங்களை அறிய, https://www.tndalu.ac.in/recruitment.html என்ற இணையதளப்பக்கத்தின் மூலம் அறிந்துகொள்ளலாம்.