மத்திய தொழிற்பாதுகாப்புப் படையில் காலியாக உள்ள 647 உதவி சப் இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே ஆர்வமுள்ள இளைஞர்கள் வருகின்ற  பிப்ரவரி 5 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக்கொள்ளவும்.


இந்தியாவின் முக்கிய தொழிற்நிலையங்களைப் பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்ட துணை ராணுவப்படை தான் மத்திய தொழிற்பாதுகாப்பு படை. மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டுவரும் இந்நிறுவனம், முன்னதாக இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின்படி, 2800 படை வீரர்களுடன், மத்திய அரசின் நிறுவனங்களுக்கு மட்டும் பாதுகாப்பு வழங்குவதற்காக ஆரம்பிக்கப்பட்டது. இதனையடுத்து 1983 ஆம் ஆண்டு முதல் ஆயுதம் ஏந்தும் உரிமை இந்த வீரர்களுக்கு வழங்கப்பட்டது.





மேலும் அணு உலைகள், விண்வெளி ஆய்வகங்கள், துறைமுகங்கள், விமான நிலையங்கள், பாதுகாப்பு தேவைப்படும் அரசு கட்டிடங்கள், புராதானச் சின்னங்கள் போன்றவைகளைப் பாதுகாக்கும் பொறுப்பில் மத்திய தொழிற்பாதுகாப்பு படை வீரர்கள் பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக இங்கு பல்வேறு துறைகளின் கீழ் பலர் பணியாற்றிவரும் நிலையில் தற்போது மத்திய தொழிற்பாதுகாப்பு படையில் உதவி சப் – இன்ஸ்பெக்டர் பணிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் வேறு என்ன தகுதி தேவை? என அறிந்துக்கொள்ளலாம்..


மத்திய தொழிற்பாதுகாப்புப் படையில் உதவி சப் இன்ஸ்பெக்டர் பணிக்கானத் தகுதிகள்


காலிப்பணியிடங்கள் -  647


கல்வித்தகுதி: இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்டப் பல்கலைக்கழகத்தில் ஏதாவது ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும்.


வயது வரம்பு :


விண்ணப்பதாரர்கள் 35 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.


விண்ணப்பிக்கும் முறை:


மேற்கண்ட தகுதியும், மத்திய தொழிற்பாதுகாப்பு படையில் பணிபுரிய வேண்டும் என்ற ஆசையில் உள்ள இளைஞர்கள ஆன்லைனில் வாயிலாக பிப்ரவரி 5 ஆம் தேதிக்குள்  விண்ணப்பிக்க வேண்டும்.


முதலில், https://www.cisf.gov.in/cisfeng/recruitment/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளப்பக்கத்தில் உள்ள விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்துக்கொள்ள வேண்டும்.


அடுத்ததாக விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் சரியாக பூர்த்தி செய்துக்கொள்ள வேண்டும். இதனையடுத்து இப்பணியிடங்களுக்கு கேட்கப்பட்டுள்ள அனைத்து ஆவணங்களையும் இணைத்து விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டும்.


விண்ணப்பக்கட்டணம் – விண்ணப்பதாரர்கள் எந்தவித விண்ணப்பக்கட்டணமும்  செலுத்த தேவையில்லை. 





தேர்வு முறை:


மேற்கண்ட முறைகளில் மத்திய தொழிற்பாதுகாப்பு படை உதவி சப் இன்ஸ்பெக்டர் பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு  எழுத்துத்தேர்வு, உடற்தகுதி தேர்வு மற்றும் மருத்துவப் பரிசோதனை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


எனவே ஆர்வமுள்ள இளைஞர்கள் இந்த வாய்ப்பைத் தவறாமல் பயன்படுத்திக்கொள்ளவும். இன்னும் ஒரு மாதம் காலம் உள்ள நிலையில் விண்ணப்பித்துப் பயன்பெறுமாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் இப்பணியிடங்கள் குறித்த கூடுதல் விபரங்களை, https://www.cisf.gov.in/cisfeng/wp-content/uploads/2021/12/3815.pdf  என்ற இணையதளப்பக்கத்தின் மூலம் முழுமையாக அறிந்துக்கொள்ளலாம்.