ஒப்பந்த அடிப்படையில் வேலை

தமிழகத்தில் வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில் அரசு மூலமாகவும், தனியார் நிறுவனங்கள் மூலமாகவும் வேலைவாய்ப்புகளை வழங்கி வருகிறது. இந்த நிலையில் சென்னையில் ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் தொடர்பாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மாவட்ட மகளிர் அதிகார மையத்தில் ஒப்பந்த அடிப்படையில் பாலின சிறப்பு நிபுணராக பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

தமிழ்நாடு அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் செயல்படும் மாவட்ட மகளிர் அதிகாரம் மையத்தில் ஒப்பந்த அடிப்படையில் சென்னை பகுதியில் பணிபுரிய தற்போது காலியாக உள்ள இரண்டு பணியிடங்களான பாலின சிறப்பு வல்லுநர் பணியிடங்களுக்கு தகுதிகளின் அடிப்படையில் தேர்வு செய்ய தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளார். 

பதவியிடங்கள் - பாலின சிறப்பு நிபுணர் (Gender Specialist)

காலிப்பணியிடம்- 2

Continues below advertisement

தகுதிகள்

Qualification: Graduate insocial work or other social disciplines. Post graduates will be preferred.Experience: At least 3 year'sexperience of working with the government or non government organisations in gender focused themes.

மாத ஊதியம்

Rs.21,000/-

வயது வரம்பு

Upper age limit - 35 yrs

பணியிடங்களுக்கு உரிய சான்றிதழ்களுடன் 09.01.2026 மாலை 5.00 மணிக்குள் மாவட்ட சமூகநல அலுவலகம், எட்டாவது தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், சிங்காரவேலர் மாளிகை, இராஜாஜி சாலை, சென்னை-01 என்ற முகவரியில் நேரடியாகவும் மற்றும் தபால் மூலமாகவும் விண்ணப்பம் செய்திடுமாறு  சென்னை  மாவட்ட  ஆட்சித்தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.