தமிழ்நாடு சமூக நலத்துறை துறையின் கீழ் மதுரை, தொண்டாமுத்தூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள வேலைவாய்ப்புகளுக்கு வரும் 15-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையில் உள்ள அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி விவரம்
அலுவலக உதவியாளர்
பணியிடம்
தொண்டாமுத்தூர் ஊராட்சி
கல்வித் தகுதி:
இதற்கு விண்ணப்பிக்க 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு விவரம்
இதற்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சமாக 18 வயது நிரம்பியவராகவும் அதிகபட்சமாக 32 வயதுக்கும் மிகாமலும் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை
இதற்கு பெறப்படும் விண்ணப்பங்களில் இருந்து தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
எப்படி விண்ணப்பிப்பது?
https://coimbatore.nic.in/ - என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து விண்ணப்ப படிவத்தை தரவிறக்கம் செய்து பூர்த்து செய்து தேவயான ஆவணங்களுடன் அஞ்சல் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி
ஆணையாளர்,
ஊராட்சி ஒன்றியம்,
தொண்டாமுத்தூர்.
விண்ணப்பிக்க கடைசி தேதி - 15.11.2023
செவிலியர் வேலைவாய்ப்பு
மதுரை மாவட்டத்தில் உள்ள நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி விவரம்
நகர்ப்புற சுகாதார மேலாளர் / பகுதி சுகாதர செவிலியர்
மருந்தாளுநர் (Pharmacist)
ஆய்வக நுட்புநர் (Lab Technician)
பல்நோக்கு சுகாதாரப் பணியாளர்
கல்வித் தகுதி
நகர்ப்புற சுகாதார மேலாளர் எம்.எஸ்.சி, நர்ஸிங் படித்திருக்க வேண்டும். இளங்கலை பட்டம் முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். 3 ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்.
மருந்தாளுநர் படிப்புக்கு Pharmacist துறயில் இளங்கலை பட்டம், டிப்ளமோ படித்திருக்க வேண்டும். தமிழ்நாடு ஃபார்மசி கவுன்சிலின் அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும்.
ஆய்வக நுட்புநர் பணிக்கு மெடிக்கல் லேப் டெக்னாலஜி படிப்பில் சான்றிதழ் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பல்நோக்கு சுகாதாரப் பணியாளர் பணிக்கு எட்டாவது படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு விவரம்
பல்நோக்கு சுகாதாரப் பணியாளர் பணிக்கு விண்ணப்பிக்க 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். மற்ற பணியிடங்களுக்கு 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
ஊதிய விவரம்
- நகர்புற சுகாதார மேலாளர் / பகுதி சுகாதர செவிலியர் - ரூ.25,000/-
- மருந்தாளுநர் (Pharmacist) - ரூ.15,000/-
- ஆய்வக நுட்புநர் (Lab Technician) - ரூ.13,000/-
- பல்நோக்கு சுகாதாரப் பணியாளர் ரூ.8500/-
விண்ணப்பிக்கும் முறை
இதற்கு விண்ணப்பிக்க பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேவையான கல்வி ஆவணங்களுடன் நேரிலோ / விரைவு தபால் / மின்னஞ்சல் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி -
செயலாளர்
துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள்
மாவட்ட நலவாழ்வு சங்கம்,
மாவட்ட ஆட்சியர் வளாகம்,
மதுரை - 625 014
விண்ணப்பிக்க கடைசி தேதி - 15.11.2023
விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்ய, கூடுதல் விவரங்களை அறிய https://cdn.s3waas.gov.in/s3f5f8590cd58a54e94377e6ae2eded4d9/uploads/2023/11/2023110166.pdf - என்ற இணைப்பை கிளிக் செய்து காணவும்.
கூடுதல் விவரங்களுக்கு https://cdn.s3waas.gov.in/s3f5f8590cd58a54e94377e6ae2eded4d9/uploads/2023/11/2023110141.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.
சமூக நலத்துறையில் வேலை
மதுரை மாவட்ட சமூக நலத்துறை சார்பில் மைய நிர்வாகி, Case Worker, பாதுகாவலர் மற்றும் உதவியாளர் பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பணி விவரம்:
- மைய நிர்வாகி
- மூத்த ஆலோசகர்
- ஐ.டி. ஊழியர்
- Case Worker
- பாதுகாவலர் (Security Gurard)
- உதவியாளர் (Multi-purupose Helper)
கல்வித் தகுதி:
மைய நிர்வாகி பணிக்கு சோசியல் வோர்க், சட்டம், சோசியாலஜி, சமூக அறிவியல், மன நலம் ஆகிய துறைகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
ஐ.டி. ஊழியர் பணிக்கு கம்யூட்டர் பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும். தமிழ், ஆங்கிலம் டைப்பிங் முதுநிலை பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
Case Worker பணிக்கு சமூக பணி அல்லது Development Managament பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு தீர்வு காணும் துறையில் ஓராண்டு பணி அனுபவம் இருக்க வேண்டும்.
பணி நேரம்:
- காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை
- நண்பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை
- இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை
பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் இந்த நேரத்தில் பணிக்கு அமர்த்தப்படுவர். கேஸ் வோர்க்கர் பணிக்கு பெண்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது
பாதுகாவலர் பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பாதுகாவலராக இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருப்பவராக இருக்க வேண்டும்.
பணி நேரம்:
- காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை
- இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை
உதவியாளர் பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். வீடு, அலுவலகத்தை பராமரிக்கும் பணிகள் தெரிந்திருக்க வேண்டும்.
பணி நேரம்:
- காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை
- இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை
இந்த மூன்று பணியிடத்திற்கும் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் மதுரையில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
ஊதிய விவரம்:
- மைய நிர்வாகி - ரூ.30,000/-
- மூத்த ஆலோசகர்-ரூ.20,000/-
- ஐ.டி. ஊழியர் - ரூ.18,000/-
- Case Worker- ரூ.15,000/-
- பாதுகாவலர் (Security Gurard) - ரூ.10,000/-
- உதவியாளர் (Multi-purupose Helper) - ரூ.6,400/-
விண்ணப்பிப்பது எப்படி?
விண்ணப்பங்களை சுயவிவர குறிப்புடன், தேவையான சான்றிதழ்களின் நகலுடன் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அஞ்சல் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
District Social Welfare Officer,
District Social Welfare Office,
Third Floor,
Additional Building of Collectorate,
Madurai -20
அறிவிப்பின் முழு விவரத்திற்கு கிளிக் செய்யவும் - https://cdn.s3waas.gov.in/s3f5f8590cd58a54e94377e6ae2eded4d9/uploads/2023/10/2023102560.pdf