திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள திட்ட அலுவலகத்தில் உள்ள ஒப்பந்த அடிப்படையிலான பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி விவரம்
Aspirational Block Fellow
கல்வி மற்றும் பிற தகுதிகள்
- அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- டேட்டா அனலிசிஸ், ப்ரெசண்டேசன் ஸ்கில்ஸ், புராஜெக்ட் மேனேஜ்மெண்ட் உள்ளிட்டவற்றை தெரிந்திருக்க வேண்டும்.
- சமூக ஊடகங்கள் பயன்படுத்த வேண்டும்.
- நல்ல மொழியாளுமை வேண்டும். தமிழ் மொழி நன்றாக தெரிந்திருக்க வேண்டும்.
- இதற்கு தேர்வு செய்யப்படுவர் திருவண்ணாமலையில் உள்ள திட்ட அலுவலக பணிகளோடு டெல்லியில் உள்ள நித்தி ஆயோக் அலுவலகத்தில் உள்ள அதிகாரிகள் உடன் இணைந்து பணியாற்ற வேண்டியிருக்கும்.
- Good Governance practices(GGP) ஆவணப்படுத்த வேண்டும்.
- DM/DC/CDO/CEO/BDO/State Nodal Officer(SPC)/NITI உள்ளிட்ட அலுவலகங்களுக்கு அறிக்கை அனுப்ப வேண்டும்.
- குழுவினருடன் பணியாற்ற உற்சாகத்துடன் இருக்க வேண்டும்.
ஊதிய விவரம்
இதற்கு மாத ஊதியமாக ரூ.55 ஆயிரம் வழங்கப்படுகிறது.
விண்ணப்பத்துடன் சமர்பிக்க வேண்டிய ஆவணங்கள்
10-வது, 12-வது தேர்ச்சி சான்றிதழ்
மதிப்பெண் சான்றிதழ்
வயது சான்று மற்றும் பணி அனுபவ சான்றிதழ்
பணி காலம்
இது ஓராண்டு கால பணியாகும். பணி திறன் அடிப்படையில் தேவையிருப்பின் பணிகாலம் நீட்டிக்கப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி?
https://tiruvannamalai.nic.in/- என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி
The District Planning Officer,
District Planning Cell,
4th Cross Road, Gandhi Nagar,
Tiruvannamalai District.
விண்ணப்பிக்க கடைசி தேதி - 18.11.2023 மாலை 5.45 மணி வரை
வேலைவாய்ப்பு தொடர்பான கூடுதல் தகவலுக்கு https://cdn.s3waas.gov.in/s318997733ec258a9fcaf239cc55d53363/uploads/2023/11/2023110423.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.
தேனியில் வேலை
தேனி மாவாட்ட சமூக பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்பட்டும் வரும் அலுவலகத்தில் சமூக பணியாளர் பணியிடத்திற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி விவரம்
சமூகப் பணியாளர் (Social Worker)
கல்வி மற்றும் பிற தகுதிகள்
இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் சமூகவியல், சமூகப்பணி இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
குழந்தைகள் நலன் / சமூக நலன் சார்புடைய பணிகளில் பணிபுரிந்த அனுபவம் இருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
கணினி பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு விவரம்
இதற்கு விண்ணப்பிக்க 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
ஊதிய விவரம்:
இதற்கு மாத ஊதியமான ரூ.18,536/- வழங்கப்படுகிறது.
பணிகாலம்
இது ஓராண்டு கால ஒப்பந்த அடிப்படையிலான வேலைவாய்ப்பு ஆகும்.
தெரிவு செய்யப்படும் முறை
இதற்கு தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி?
இதற்கு தகுதியுள்ளவர்கள் https://theni.nic.in/ - என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அஞ்சலில் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,
மாவட்ட் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்,
ஒருங்கிணைந்த அரசு பல்துறை வளாகம் - II
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்.
தேனி - 625531
விண்ணப்பிக்க கடைசி தேதி - 15.11.2023
வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் விவரங்களை காண https://cdn.s3waas.gov.in/s39a96876e2f8f3dc4f3cf45f02c61c0c1/uploads/2023/10/2023103155.pdf- என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.