செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மீனவ சமுதாயத்தை சார்ந்த பட்டதாரி இளைஞர்கள் இந்திய குடிமைப்பணிகளில் சேருவதற்கான போட்டி தேர்வில் சிறப்பிக்க ஆயத்த பயிற்சி அளித்தல்.


மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை


அரசாணை எண்.77, கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை, நாள்.13.09.2017 –ன்படி மீனவ சமுதாயத்தை சார்ந்த 20 பட்டதாரி இளைஞர்களுக்கு இந்திய குடிமைப் பணிகளுக்கான போட்டித் தேர்வில் கலந்து கொள்வதற்கான ஆயத்த பயிற்சியை மீன் வளம்- மீனவர் நலத்துறை மற்றும் சென்னை அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையம் இணைந்து ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.


செங்கல்பட்டு மாவட்டத்தைச் சார்ந்த கடல் மற்றும் உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மற்றும் மீனவர் நலவாரிய உறுப்பினர்களின் வாரிசு பட்டதாரி இளைஞர்கள் இப்பயிற்சி திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம். 2023-24 ஆம் ஆண்டில் இத்திட்டத்தின்கீழ் பயிற்சி பெற விரும்புவோர் விண்ணப்ப படிவம் (Application Form) மற்றும் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை (Guidelines) மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறையின் www.fisheries.tn.gov.in என்ற இணையதளத்தில் கட்டணமின்றி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது விண்ணப்ப படிவங்களை காஞ்சிபுரம் (இருப்பு) நீலாங்கரை, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, உதவி இயக்குநர் அலுவலகத்தில் அலுவலக வேலை நாட்களில் விலையின்றி பெற்று கொள்ளலாம்.


விண்ணப்பதாரர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறையின் இணையதளத்தில் உள்ள அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரியில் உள்ள காஞ்சிபுரம் (இருப்பு) நீலாங்கரை, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு பதிவு அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ 18.11.2023-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.


மேலும் இத்திட்டம் குறித்த கூடுதல் விபரங்களுக்கு காஞ்சிபுரம் (இருப்பு) நீலாங்கரை, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம்.


அலுவலக முகவரி:


மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகம்,


எண்.2/601A, கிழக்கு கடற்கரை சாலை,


சின்ன நீலாங்கரை,


(நேர் ஐஸ் பேக்டரி பஸ் நிறுத்தம்,


சென்னை – 600 115.


அலுவலக தொலைபேசி எண்:


9384824247 /  9843305513




Job Alert: நர்ஸிங் படித்தவரா? ஆரம்ப சுகாதார நிலையத்தில் வேலை; விண்ணப்பிப்பது எப்படி?


மதுரை மாவட்டத்தில் உள்ள நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 


பணி விவரம்


நகர்ப்புற சுகாதார மேலாளர் / பகுதி சுகாதர செவிலியர்


மருந்தாளுநர் (Pharmacist)



ஆய்வக  நுட்புநர் (Lab Technician)


பல்நோக்கு சுகாதாரப் பணியாளர்


கல்வித் தகுதி


நகர்ப்புற சுகாதார மேலாளர் எம்.எஸ்.சி, நர்ஸிங் படித்திருக்க வேண்டும். இளங்கலை பட்டம் முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். 3 ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்.


மருந்தாளுநர் படிப்புக்கு Pharmacist துறயில் இளங்கலை பட்டம்,  டிப்ளமோ படித்திருக்க வேண்டும். தமிழ்நாடு ஃபார்மசி கவுன்சிலின் அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும்.


ஆய்வக நுட்புநர் பணிக்கு மெடிக்கல் லேப் டெக்னாலஜி படிப்பில் சான்றிதழ் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 


பல்நோக்கு சுகாதாரப் பணியாளர் பணிக்கு எட்டாவது படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 


வயது வரம்பு விவரம்


பல்நோக்கு சுகாதாரப் பணியாளர் பணிக்கு விண்ணப்பிக்க 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். மற்ற பணியிடங்களுக்கு 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.


ஊதிய விவரம்


நகர்புற சுகாதார மேலாளர் / பகுதி சுகாதர செவிலியர் - ரூ.25,000/-
மருந்தாளுநர் (Pharmacist) - ரூ.15,000/-
ஆய்வக  நுட்புநர் (Lab Technician) - ரூ.13,000/-
பல்நோக்கு சுகாதாரப் பணியாளர் ரூ.8500/-
விண்ணப்பிக்கும் முறை


இதற்கு விண்ணப்பிக்க பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேவையான கல்வி ஆவணங்களுடன் நேரிலோ / விரைவு தபால் / மின்னஞ்சல் மூலமாக விண்ணப்பிக்கலாம். 


விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி - 


 செயலாளர் 
துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள்
மாவட்ட நலவாழ்வு சங்கம்,
மாவட்ட ஆட்சியர் வளாகம்,
மதுரை - 625 014


விண்ணப்பிக்க கடைசி தேதி - 15.11.2023