திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்படும் மாவட்ட நல சங்கத்தின் கட்டுப்பாட்டின் உள்ள மாவட்ட புகையிலை பொருட்கள் பயன்பாட்டு கட்டுப்பாட்டு மையத்தில் (District Tobacco Control Cell) உள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு குறித்த விவரங்களை காணலாம். 


பணி விவரம்


Social Worker


கல்வித் தகுதி:


இதற்கு விண்ணப்பிக்க B.sc. Sociology Social Woker படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இரண்டு ஆண்டுகால பணி அனுபவம் இருக்க வேண்டும். சுகாதார துறையில் பணி அனுபவம் இருக்க வேண்டும். 


ஊதிய விவரம்


இதற்கு ரூ.23,800 மாத ஊதியமாக வழங்கப்படும். 


விண்ணப்பிப்பது எப்படி?


இதற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.


விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி


நிர்வாக செயலாளர் / துணை இயக்குநர் சுகாதார பணிகள்


மாவட்ட நலவாழ்வு சங்கம்
துணை இயக்குநர் சுகாதார பணிகள் அலுவலகம்


54/5. ஆசூரி தெரு,
திருவள்ளூர் மாவட்டம் - 602 001


தொடர்புக்கு- 044 -27661562


இ-மெயில் - dphtlr@nic.in 


விண்ணப்பிக்க கடைசி தேதி - 13.09.2023 மாலை 5 மணி வரை 


இது தொடர்பான கூடுதல் விவரங்களை https://cdn.s3waas.gov.in/s39431c87f273e507e6040fcb07dcb4509/uploads/2023/08/20230829100-1.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.


*****


திருப்பதியில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் காலியாக உள்ள ஆசிரியர் அல்லாத பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


பணி குறித்த கூடுதல் விவரங்கள்:



  • துணை நூலகர்

  • துணை பதிவாளர்

  • ஜூனியர் கண்காணிப்பாளர்

  • ஜூனியர் உதவியாளர்

  • ஜூனியர் இந்தி உதவியாளர் 

  • ஜூனியர் தொழில்நுட்ப கண்காணிப்பாளர்

  • ஜூனியர் தொழில்நுட்ப அலுவலர் 

  • உடற்பயிற்சியாளர்


கல்வித் தகுதி:



  • துணை நூலகர் பணியிடத்திற்கு Library Science / Information Science / Documentation படிப்பில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 55 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட துறையில் 8 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

  • துணை பதிவாளர் பணியிடத்திற்கு முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 55 சதவீதம் மதிப்பெண் இருக்க வேண்டும். Finance & Accounts/ CA/ICWA  படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஐந்து ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

  • ஜூனியர் கண்காணிப்பாளர் பணியிடத்திற்கு ஏதாவது ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 6 ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும். 

  • ஜூனியர் உதவியாளர் பணிக்கு எதாவது ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். கம்யூட்டர் பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும். 

  • ஜூனியர் இந்தி உதவியாளர் இந்தி, ஆங்கிலம் ஆகியவற்றில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 60% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.


ஊதிய விவரம்: 


இந்தப் பணிகளுக்கு Pay Level -12, Pay Level-6, Pay Level -3, Pay Level-5 என்ற வரைவுபடி ஊதியம் வழங்கப்பட உள்ளது.


விண்ணப்பிக்கும் முறை: 


https://iittp.plumerp.co.in/prod/iittirupati/staffrecruitment - என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம்.


தேர்வு செய்யப்படும் முறை: 



  • குரூப் ஏ பணிக்கு ஸ்கிரீனிங் டெஸ்ட், நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

  • குரூப் பி & சி பணிக்கு Objective- Based Test, எழுத்துத் தேர்வு, ட்ரேட் டெஸ்ட் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். 


தொடர்புக்கு .-- rmt_queries@iittp.ac.in


 பணி குறித்து விரிவான தகவல்களை தெரிந்து கொள்ளவும்  - https://iittp.ac.in/pdfs/recruitment/2023/Detailed%20advertisement%20-%20Staff%2002-2023.pdf


விண்ணப்பிக்க கடைசி தேதி - 22.09.2023