டெல்லி காவல் துறை, மத்திய ஆயுத காவல் படையில் (சிஏபிஎஃப்) உள்ள பல்வேறு காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பை எஸ்.எஸ்.சி. வெளியிட்டுள்ளது.
பணி விவரம்
Sub- Inspector
டெல்லி காவல் துறை
சப் இன்ஸ்பெக்டர் - ஆண்- 124 பெண் -61 (மொத்தம் - 186)
மத்திய ஆயுதப்படை - சப் இன்ஸ்பெக்டர் - 4001
மொத்த பணியிடங்கள் - 4187
கல்வித் தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து ஏதாவது ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
இதற்கு விண்ணப்பிக்க 20 வயது நிரம்பியவராகவும் 25 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பது எப்படி?
https://ssc.nic.in/ -என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். எல்லா விவரங்களும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தை பிரிண்ட் அவுட் அல்லது ஃபைல் ஆக சேமித்து வைத்துக்கொள்வது நல்லது.
தேர்ந்தெடுக்கப்படும் முறை:'
நிரந்த பணிக்கு எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். ஒப்பந்தம் அடிப்படையிலான பணிக்கு நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். நேர்காணலுக்கு நூறு மதிப்பெண் வழங்கப்படும்.
கம்யூட்டர் தேர்வு, உடல்தகுதி தேர்வு, மருத்துவ பரிசோதனை உள்ளிட்டவை அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
நேர்காணலுக்கு 100 மதிப்பெண் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் எடுக்கப்படும் மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
தேர்வு நடைபெறும் நாள்
தமிழ்நாட்டை பொறுத்தவரை சென்னை, கோவை, சேலம், மதுரை, திருச்சி, திருநெல்வேலி, வேலூர் ஆகிய நகரங்களில் தேர்வு மையம் நடைபெறும். புதுவையிலும் நடைபெறுகிறது. கணிணி வழி தேர்வு மே மாதம் 9, 10, 13 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்ப கட்டணம்
விண்ணப்ப கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். பெண்கள், பழங்குடியின / பட்டியலின பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் செலுத்துதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
கவனிக்க
விண்ணப்பதாரர்கள் செயலில் உள்ள தொடர்பு எண் மற்றும் இ-மெயில் முகவரியை வழங்குமாறு கேட்டுகொள்ளப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 28.03.2024 23:00 மணி வரை
இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு https://ssc.gov.in/api/attachment/uploads/masterData/NoticeBoards/final%20notice%20cpo%202024%2004.03.2024.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.
ஆன்லைனில் விண்ணப்ப கட்டணம் செலுத்த கடைசி தேதி - 29.03.2024