CRPF Constable Recruitment 2023: சி.ஆர்.பி.எஃப்.பில் 9,212 பணியிடங்கள்;யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? முழு விவரம்?

CRPF Constable Recruitment 2023: மத்திய அரசின் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு குறித்து முழு விவரத்தை இங்கே காணலாம்.

Continues below advertisement

மத்திய அரசின் சென்ட்ரல் ரிசர்வ் போலீஸ் ஃபோர்ஸ் (The Central Reserve Police Force (CRPF) பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு  வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சி.ஆர்.பி.எஃப் இல் காலியாக உள்ள 9,212 இடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 9,105 பணியிடங்களுக்கு ஆண்களும், 107 இடங்களுக்கு பெண்களையும் தேர்வு செய்ய இருக்கின்றனர்.இதற்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் என்னென்ன என்பது பற்றி கீழே காணலாம். 

Continues below advertisement

பணி விவரம்: 

கான்ஸ்டபிள் (Constable (Technical & Tradesmen))

ஓட்டுநர், மோட்டர் மெக்கானிக், கார்பெண்டர், டெய்லர், தோட்ட பணியாளார், பெயிண்டர், சமையலர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 

மொத்த பணியிடங்கள்: 9,212

கல்வித் தகுதி: 

  • ஓட்டுநர் உள்ளிட்ட பணிகளுக்கு பத்தாவது அல்லது +2 தேர்ச்சி போதுமானது. ஓட்டுநர் உரிமம் அவசியமானது.
  • டெக்னிக்கல் பணிகளுக்கு விண்ணப்பிக்க அதற்கேற்ற தகுதி இருக்க வேண்டும். 
  • மெக்கானிக் பணிக்கு பத்தாம் வகுப்பு அல்லது +2 தேர்ச்சியோடு  ஐ.டி.ஐ. படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
  • மற்ற ட்ரேட்ஸ்மேன் பணிகளுக்கு பத்தாவது அல்லது +2 வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
  • எலக்ட்ரிசியன் பணிக்கு பணி அனுபவம் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  • ஐ.டி.ஐ. தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வயது வரம்பு: 

டிரைவர் பணிக்கு விண்ணப்பிக்க 27 வயதுக்கு மிகாமல் இருத்தக் கூடாது. அரசு விதிகளின் படி,வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும் என்று அறிவிப்பில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊதிய விவரம்: 

 இந்தப் பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மாத ஊதியமாக ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிப்பது எப்படி?

இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் சி.ஆர்.பி.எஃப் இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.  https://crpf.gov.in/- என்பது அதிகாரப்பூர்வ வலைதள முகவரியாகும்.

விண்ணப்ப கட்டணம்: 

இதற்கு விண்ணப்பிக்க கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். பட்டியலின/ பழங்குடியின பிரிவினர், முன்னாள் இராணுவத்தினர், பெண்கள் உள்ளிட்டோருக்கு விண்ணப்ப கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆன்லைன் மூலமாக மட்டுமே கட்டணம் செலுத்த வேண்டும். கூகுள் பே, ஃபோன் பே உள்ளிட்ட டிஜிட்டல் முறையிலும் விண்ணப்ப கட்டணத்தை செலுத்தலாம் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை: 

இதற்கு ஆன்லைன் எழுத்துத் தேர்வு, உடல்தகுதி தேர்வு உள்ளிட்டவைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். ஆன்லைன் கம்ப்யூட்டர் தேர்வுகளுக்கான அட்மிட் கார்டு ஜூன் மாதம் 20 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கம்ப்யூட்டர் தீர்வுகள் ஜூலை மாதம் 1ம் தேதி முதல் 13ஆம் தேதிக்குள் நடத்தப்படும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

முக்கியமான தேதிகள்:


விண்ணப்பிக்க கடைசி தேதி - 25.04.2023

இந்தப் பணி குறித்த கூடுதல் தகவல்களுக்கு https://crpf.gov.in/writereaddata/Portal/Recruitment_Advertise/ATTACHMENTS/263_1/1_145032023.pdf- என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.


மேலும் வாசிக்க.. 

CM Stalin Letter to Student : சமூக அக்கறையுடன் செயல்பட்ட 7-ஆம் வகுப்பு மாணவி.. கடிதம் எழுதி பாராட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

Covid Cases India : 4 மாதங்களில் இல்லாத அளவுக்கு உச்சம்...இந்தியாவை மீண்டும் மிரட்டும் கொரோனா..!

Continues below advertisement
Sponsored Links by Taboola