மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (Staff Selection Commission) நடத்தும் ஒருகிணைந்த பட்டதாரி லெவல் (Combined Graduate Level Examination) தேர்வுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் குரூப் பி, குரூப் சி ஆகிய பிரிவுகளில் உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.




பணி விவரம்:


குரூப் ‘B’ 


 Pay Level-7



  • Assistant Section Officer

  • Inspector of Income Tax

  • Inspector, (CGST & Central Excise)

  • Inspector (Preventive Officer)

  • Inspector (Examiner)

  • Assistant Enforcement Officer

  • Sub Inspector

  • Inspector Posts

  • Inspector (Central Bureau Narcotics)
     


Pay Level-6



  • Assistant / Assistant Section Officer

  • Executive Assistant

  • Research Assistant

  • Divisional Accountant

  • Sub Inspector (NIA)

  • Sub-Inspector/ Junior Intelligence Officer

  • Junior Statistical Officer (JSO)

  • Statistical Investigator Grade-II


குரூப் ‘C’ 


Pay Level-5



  • Auditor (Offices under C&AG,CGDA , பிற Ministry/ Departments,,C&AG, Controller General of Accounts), 

  • Accountant 


Pay Level-4



  • Postal Assistant/ Sorting Assistant 

  • Senior Secretariat Assistant/ Upper Division Clerks

  • Senior Administrative Assistant

  • Tax Assistant (CBDT, CBIC)

  • Sub-Inspector (CBN)


அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள பணியிடங்களின் அடிப்படையில் தோராயமாக 17,727 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். 


கல்வித் தகுதி:


இந்தப் பணியிடங்களுக்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்த்தில் இருந்து இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.


ஜூனியர், சீனியர் Statistical அதிகாரி பணிக்கு இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். கணிதத்தில் 60% மதிப்பெண் எடுத்திருக்க வேண்டும்.


ஊதிய விவரம்:



  • Pay Level-7 : ரூ. 44,900 - 1,42,400

  •  Pay Level-6 : ரூ. 35,400 - 1,12,400

  • Pay Level-5: ரூ.29,200 - 92,300

  • Pay Level-4 : ரூ. 25,500 - 81, 100


வயது வரம்பு


இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 18  வயது முதல் 27 வரை இருக்க வேண்டும். சில பணியிடங்களுக்கு 30 வயது நிரம்பியவர்களும் விண்ணப்பிக்கலாம். 




விண்ணப்ப கட்டணம்:


இதற்கு விண்ணப்பிக்க கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். ஆன்லைனில் மட்டுமே கட்டணம் செலுத்த முடியும். பட்டியலின/ பழங்குடியின பிரிவினர், பெண்கள், முன்னாள் இராணுவ பணியாளர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.


தேர்வு செய்யப்படும் முறை:


இதற்கு கணினி வழியிலான ஆன்லைன் தேர்வில் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர். முதல்நிலை மற்றும் இரண்டாம் நிலை தேர்வுகள் நடத்தப்படும்.


உடற்தகுதித் தேர்வு, திறனறிவுத் தேர்வு ஆகியவற்றின் அடிக்கப்படையில் தகுதியானவர்கள் தெரிவு செய்யப்படுவர். 


பாடத்திட்டம் விவரம்:




கூடுதல் தகவல்களுக்கு:


ஆங்கில மொழியில் உள்ள அறிவிப்பின் லிங்க்கை https://ssc.gov.in/api/attachment/uploads/masterData/NoticeBoards/Notice_of_CGLE_2024_06_24.pdf - க்ளிக் செய்து காணவும்.


விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:



  • முதலில் Notices | Staff Selection Commission | GoI (ssc.nic.in) என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
    home page- ல் Apply என்பதை கிளிக் செய்யவும்.

  • SSC CGL Recruitment 2024 -’Apply’ என்பதை கிளிக் செய்யவும்

  • முதல் முறை விண்ணப்பம் செய்வோர் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்த பின் பயனாளர் ஐ. டி. ரெஜிஸ்டர் செய்யவும். 

  • அடுத்து, லாகின் செய்து விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்டுள்ளவைகளுக்கு சரியான தகவல்களை பூர்த்தி செய்ய வேண்டும். 

  • விண்ணப்பத்தை பூர்த்தி செய்தவுடன், விண்ணப்ப கட்டணம் செலுத்தி, விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.


முக்கிய நாட்கள்:


விண்ணப்பிக்க கடைசி தேதி- 24.07.2024 - இரவு 11 மணி வரை


விண்ணப்ப கட்டணம் செலுத்த கடைசி நாள் - 25.07.2024 இரவு 11 மணி வரை 


விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டிய கடைசி நாள் - 10.082024 - 11.08.2024


முதல் நிலை கம்யூட்டர் தேர்வு நடைபெறும் மாதம்-  செப்டம்பர் - அக்டோபர் 2024


இரண்டாம் நிலை கம்ப்யூட்டர் தேர்வு நடைபெறும் மாதம் - டிசம்பர், 2024