மத்திய தொழிற்பாதுகாப்பு படையில் (CISF) காலியாக உள்ள 249 தலைமை காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ள இளைஞர்கள் வருகின்ற மார்ச் 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.


இந்தியாவின் அணு உலைகள், விண்வெளி ஆய்வகங்கள், துறைமுகங்கள், விமான நிலையங்கள், பாதுகாப்பு தேவைப்படும் அரசு கட்டிடங்கள், புராதானச் சின்னங்கள் போன்ற முக்கிய தொழிற்நிலையங்களைப் பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்ட துணை ராணுவப்படை தான் சி.ஐ.எஸ்.எப் எனப்படும் மத்திய தொழிற்பாதுகாப்பு படை. மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டுவரும் இந்நிறுவனம், முன்னதாக இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின்படி, 2800 படை வீரர்களுடன், மத்திய அரசின் நிறுவனங்களுக்கு மட்டும் பாதுகாப்பு வழங்குவதற்காக ஆரம்பிக்கப்பட்டது. இதனையடுத்து 1983 ஆம் ஆண்டு முதல் ஆயுதம் ஏந்தும் உரிமை இந்த வீரர்களுக்கு வழங்கப்பட்டது. 


இத்தகைய சிறப்பு வாய்ந்த மத்திய தொழிற்பாதுகாப்பு படைப்பணிக்கு சேர வேண்டும் என இளைஞர்கள் பலர் ஆர்வத்துடன் காத்திருப்பார்கள். அவர்களின் கனவை நினைவாக்கும் விதமாக சி.ஐ.எஸ்.எபில் தலைமை காவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி என்ன? விண்ணப்பிக்கும் முறை குறித்து இங்கே அறிந்துக்கொள்வோம்.



CISFயில் தலைமை காவலர் பணிக்கானத் தகுதிகள்:


காலிப்பணியிடங்கள்: 249


கல்வித்தகுதி:


தலைமைக்காவலர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சிப்பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


வயது வரம்பு:


மத்திய தொழிற்பாதுகாப்பு படை தலைமை காவலர் பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 18 வயது முதல் 23 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.


விண்ணப்பிக்கும் முறை:


மேற்கண்ட தகுதியும், ராணுவத்தில் பணிபுரிய வேண்டும் என்று நினைப்பவர்கள் முதலில், https://www.cisf.gov.in/cisfeng/recruitment/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குள் செல்ல வேண்டும்.


பின்னர் அப்பக்கத்தில் உள்ள தலைமை காவலர் பணிக்கான விண்ணப்படிவத்தை டவுன்லோடு செய்து அனைத்து விபரங்களையும் சரியாக பூர்த்தி செய்து வருகின்ற மார்ச் 31 ஆம் தேதிக்குள் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.


விண்ணப்பக்கட்டணம்:


ஆர்வமும், தகுதியும் உள்ள நபர்கள் ரூ.100 செலுத்தி இப்பணிக்கு விண்ணப்பிக்க வேண்டும். பெண்கள் மற்றும் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு விண்ணப்பக்கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை.


தேர்வு செய்யும் முறை:


மேற்கண்ட முறைகளில் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு Physical standard test, Documentation/ Trial Test & Proficiency Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


சம்பள விபரம்:


தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.25,000 முதல் ரூ. 81,000 வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


எனவே ஆர்வமுள்ள உள்ள நபர்கள் உடனடியாக இப்பணிக்கு விண்ணப்பித்து பயன்பெறுங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுக்குறித்த கூடுதல் விபரங்களை https://drive.google.com/file/d/1U2BPFhAJXSyHtwzIzk5Uwk0RBqobhl8A/view என்ற இணையதளப்பக்கத்தின் வாயிலாக முழுமையாக அறிந்துக்கொள்ளலாம்.