மத்திய அரசின் கீழ் செயல்பட்டுவரும் கிழக்கு கோல்பீல்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள 313 மைனிங் சித்தார் (mining sirdar) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ள பட்டாாரிகள் வருகின்ற மார்ச் 10 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.
மத்திய அரசிற்கு உட்பட்ட கிழக்கு கோல்பீல்ட்ஸ் லிமிடெட் இந்தியாவைத் தளமாகக்கொண்ட ஒரு நிலக்கரி உற்பத்தியார் நிறுவனமாகும். குறிப்பாக இந்தியாவில் நிலக்கரி சுரங்கங்கள் தேசியமயமாக்கப்பட்ட பிறகு கடந்த 1975 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்நிறுவனம் ஜார்கண்ட் மற்றும் மேற்வங்க மாநிலங்களில் நிலக்கரி சுரங்களை இயக்கிவருகிறது. ராணிகஞ்ச் நிலக்கரி வயலின் அனைத்துத் தனியார் துறை நிலக்கரி சுரங்களையும் இந்நிறுவனத் பெற்றுள்ளது. இந்நிறுவனத்தின் தலைமையகம் மேற்கு வங்கத்தில் உள்ள சான்க்டோரியாவில் அமைக்கப்பட்டு செயல்பட்டுவருகிறது.
கிழக்கு கோல்பீல்ட்ஸ் நிறுவனத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு நிலவரப்படி, கிழக்கு நிலக்கரி வயல்களில் 87 சுரங்கங்கள், 60 நிலத்தடி சுரங்கங்கள், 19 திறந்த வார்ப்புகள் மற்றும் 8 கலப்பு சுரங்கங்களுடன் 14 செயல்பாட்டு பகுதிகள் இயங்கிவருகின்றன. மேலும் கடந்த 2016-17 ஆம் ஆண்டில் 40.517 மில்லியன் டன் நிலக்கரியை உற்பத்தி செய்ததோடு அதில் 32.319 மில்லியன் டன்கள் திறந்தவெளி சுரங்கங்களிலிருந்தும், 8.127 மில்லியன் டன்கள் நிலத்தடி சுரங்கங்களிலிருந்தும் கிடைத்ததாகப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இங்கு பல்வேறு துறைகளின் கீழ் பலர் பணியாற்றி வரும் நிலையில், அவ்வப்போது பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகும்.
அதன்படி தற்போது கிழக்கு கோல்பீட்ஸ் நிறுவனத்தில் மைனிங் சித்தார் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், இப்பணிக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? விண்ணப்பிக்க என்னென்ன தகுதிகள் தேவை? என்பது குறித்து இங்கே நாமும் விரிவாக அறிந்துக்கொள்வோம்.
இசிஎல் நிறுவனப்பணிக்கானத் தகுதிகள்:
மொத்த காலிப்பணியிடங்கள்: 313
கல்வித்தகுதி :
விண்ணப்பதாரர்கள் பன்னிரெண்டாம் வகுப்பு, டிப்ளமோ, இளநிலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
நிலக்கரி நிறுவனப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களள் www.easterncoal.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வாயிலாக வருகின்ற மார்ச் 10 ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யும் முறை:
மேற்கண்ட முறைகளில் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பளம்:
மாதம் ரூபாய் 30 ஆயிரம் என நிர்ணயம்.
எனவே மத்திய அரசின் நிலக்கரி நிறுவனத்தில் 313 காலிப்பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள பட்டதாரிகள் உடனடியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பயன்பெற்றுக்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் விவரங்களை, நிலக்கரி நிறுவனத்தில் அதிகாரப்பூர்வமான இணையதளமான http://www.easterncoal.gov.in/ வாயிலாக முழுமையாக அறிந்துக்கொள்ளலாம்.