Chennai OSC Centre Recruitment:
பெண்களுக்கு தேவையான சட்ட உதவிகள் மற்றும் மருத்துவ உதவிகள் வழங்கும் நோக்கத்தோடு ஒருங்கிணைந்த சேவை மையம் செயல்பட்டு வருகிறது.
வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மருத்துவ உதவி, ஆலோசனை, சட்டம், உளவியல் மற்றும் உணர்வியல் ரீதியான ஆதரவு அளிப்பதற்காக இந்த மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் காலியாக உள்ள மைய நிர்வாகி, வழக்கு அலுவலர்கள், பாதுகாப்பாளர், பன்முக உதவியாளர் ஆகிய பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பணி விவரம்:
மைய நிர்வாகி (Centre Administrator) - 1
சட்ட அலுவலர்கள் - 6
பாதுகாவலர் -1
பன்முக உதவியாளர் (Multi Purpose Helper)- 1
கல்வித் தகுதி:
மைய நிர்வாகி பணிக்கு சமூகப் பணியில் முதுகலை பட்டம் (Master's Degree in Social Work / Psychology) பெற்றிருக்க வேண்டும்.
உளவியல் ஆலோசகர் (Counselling Psychology) (அல்லது) மேலாண்மை வளர்ச்சியில் (Development Management) பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கும் வகையில் அரசு மற்றும் அரசு சாராத திட்டங்கள் அல்லது திட்டங்களுடன் அமைக்கப்பட்ட ஒரு நிர்வாகத்தில் குறைந்தபட்சம் 4 ஆண்டு பணி அனுபவம் உடையவராகவும், உளவியல் ஆலோசனையில் ஒரு நிறுவனத்திலோ அல்லது வெளிப்பணிகளிலோ குறைந்தபட்சம் ஓராண்டு பணி அனுபவம் உடையவராகவும் இருக்க வேண்டும்.
சட்ட அலுவலர்கள் பணிக்கு சமூகப் பணியில் இளங்கலை பட்டம் (Bachelor's Degree in Social Work) பெற்றிருக்க வேண்டும்.
உளவியல் ஆலோசகர் (Counselling Psychology) (அல்லது) மேலாண்மை வளர்ச்சியில் (Development Management) பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கும் வகையில் அரசு மற்றும் அரசு சாராத திட்டங்கள் அல்லது திட்டங்களுடன் அமைக்கப்பட்ட ஒரு நிர்வாகத்தில் குறைந்தபட்சம் 4 ஆண்டு பணி அனுபவம் உடையவராகவும், உளவியல் ஆலோசனையில் ஒரு நிறுவனத்திலோ அல்லது வெளிப்பணிகளிலோ குறைந்தபட்சம் ஓராண்டு பணி அனுபவம் உடையவராகவும் இருக்க வேண்டும்.
பாதுகாப்பாளர் (Security Guard) பணியிடத்திற்கு அரசு அல்லது தனியார் நிறுவனத்தில் பாதுகாப்புப் பணியாளராக பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும். ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.
பன்முக உதவியாளர் (Multi Purpose Helper) ஏதாவது அலுவலகத்தில் பணிபுரிந்த அனுபவம் உடையவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரருக்கு சமையல் தெரிந்திருக்க வேண்டும். உள்ளூரைச் சார்ந்த பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.
ஊதிய விவரம்:
மைய நிர்வாகி - ரூ.30,000
உள்ளூரைச் சார்ந்த பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். வாகனம் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். தேவைப்படும் பட்சத்தில் சுழற்சி முறையில் 7 நாட்களிலும் 24 மணி நேரமும் பணியாற்ற வேண்டி இருக்கும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சட்ட அலுவலர்கள் - ரூ. 15,000 - இந்தப் பணிக்கு 7 நாட்களிலும் 24 மணி நேரமும் பணியாற்ற வேண்டி இருக்கும்
பாதுக்காப்பாளர் -ரூ.10,000
பன்முக உதவியாளார் - ரூ.6400
வயது வரம்பு:
இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
எப்படி விண்ணப்பிப்பது?
விரும்பும் பதவிகளுக்கு உரிய சான்றிதழ்களுடன் 27.10.2022 மாலை 5.00 மணிக்குள் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இந்தப் பணிக்கு நேரில் சென்றுதான் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
மாவட்ட சமூகநல அலுவலகம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,
8-வது தளம், சிங்காரவேலன் மாளிகை,
இராஜாஜி சாலை,
சென்னை 01
அறிவிப்பின் முழு விவரத்திற்கு https://cdn.s3waas.gov.in/s313f3cf8c531952d72e5847c4183e6910/uploads/2022/10/2022102099.pdfஎன்ற லிங்கை கிளிக் செய்யவும்.