சென்னையில் உள்ள பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர். முழுநேரக் காவலர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு சென்னையில் உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
பணி விவரம்
நிரந்தர முழுநேரக் காவலர்
தூய்மைப் பணியாளர்
அலுவலக உதவியாளர்
மொத்த பணியிடங்கள் - 09
கல்வித் தகுதி:
இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம்
நிரந்தர முழுநேரக் காவலர் -ரூ.15,700 - ரூ.58,100
தூய்மைப் பணியாளர் - ரூ.15,700 - ரூ.58,100
அலுவலக உதவியாளர் -ரூ.15,700 - ரூ.58,100
விண்ணப்பிக்கும் முறை
https://des.tn.gov.in/ta - என்ற இணைப்பை க்ளிக் விண்ணப்ப படிவத்தை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி
இயக்குநர்
பொருள்இயல் மற்றும் புள்ளிஇயல் துறை
டி.எம்.எஸ். வளாகம், தேனாம்பேட்டை,
சென்னை - 600 006
விண்ணப்பிக்க கடைசி தேதி -05.12.2023
இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு https://des.tn.gov.in/sites/default/files/2023-11/OA.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்னப்பிக்கவும்.
BHEL Recruitment 2023
பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் (BHEL) நிறுவனத்தில் ' Supervisor Trainee' பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணி விவரம்
Trainee (Mechanical)
Supervisor Trainee (Civil)
Supervisor Trainee (HR)
பணி இடம்
இந்த வேலைவாய்ப்பிற்கு தேர்வு செய்யப்படுபவர்கள் திருச்சி, போபால், ஐதராபாத், ஹரித்வார், ஜான்சி, கார்ப்ரேட் ஆபிஸ், பவர் செக்டார் உள்ள அலுவலகத்தில் பணியமர்த்தப்படுவர்.
ஊதிய விவரம்
இதற்கு தேர்ந்தெடுக்கப்படுவர்களுக்கு ரூ.32,000 - 1,00,000 வரை மாத ஊதியம் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை
ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் சான்றிதழ் சரிபார்ப்பு முறையில் விண்ணப்பிக்கும் நபர்கள் தேர்வு செய்யப்படுவர்.
கல்வித் தகுதி
- விண்ணப்பதாரர்கள் பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு, டிப்ளமோ, ஐ.டி.ஐ உள்ளிட்ட படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து எலக்ட்ரிக்கல் / எலக்ட்ரானிக்ஸ் துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- 65% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு
இதற்கு விண்ணப்பிக்க 32 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
பணி காலம்
இது இரண்டு ஆண்டுகால ஒப்பந்தம் அடிப்படையிலான பணி.
விண்ணப்ப கட்டணம்
- இதற்கு விண்ணப்பிக்க ஜி.எஸ்.டி.-யுடன் சேர்த்து ரூ.795 விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும்.
- பட்டியலின/ பழங்குடியின பிரிவினர் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு விண்ணப்ப கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கபட்டுள்ளது. ஆனால், ப்ராசசிங் கட்டணம் செலுத்த வேண்டும்.
- அதிகாரப்பூர்வ இணையத முகவரி-https://www.apprenticeshipindia.gov.in/ - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.
எப்படி விண்ணப்பிப்பது?
- விண்ணப்பதாரர்கள் BHEL இன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://careers.bhel.in:8443/bhel/jsp/#openings- கிளிக் செய்யவும்.
- ஹோம் பக்கத்தில் உள்ள மெனு பிரிவுகளில் "careers" என்பதை கிளிக் செய்யவும்.
- அடுத்து“BHEL Recruitment 2023” என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.
- உங்களது விவரங்களை பூர்த்தி செய்து உடன் தேவையான அனைத்து ஆவணங்களையும் பதிவேற்றி submit button- ஐ-கிளிக் செய்யவும்.
- https://careers.bhel.in/st_2023/static/ST_Detailed%20Advertisement.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து முழு விவரத்தை அறியலாம்.
உத்தேசிக்கப்பட்ட ஆன்லைன் எழுத்துத் தேர்வு தேதி - டிசம்பர்,2023
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 25.11.2023
மேலும் வாசிக்க..
செங்கல்பட்டில் அரசு அலுவலகத்தில் வேலை..! தகுதிகள் என்ன? விண்ணப்பிப்பது எப்படி ?