சென்னை மாநகராட்சியின் கீழ் செயல்பட்டுவரும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒப்பந்த அடிப்படையில் பல்வேறு காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் அக்டோபர் 7 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக்கொள்ளவும்.


கொரோனா தொற்று அதிகரித்து வந்த நிலையில் முன்களப்பணியாளர்களான செவிலியர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளின் பங்கு அளப்பெரிதாக இருந்தது. குறிப்பாக சென்னையில் தொற்றின் தாக்கம் அதிகரித்து வந்த அரசு மருத்துவமனைகள் மற்றும் மாநகராட்சி மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் பலர் பணியமர்த்தப்பட்டு வந்தனர். இந்நிலையில் தற்போது சென்னை மாநகராட்சி முழுவதும் செயல்பட்டுவரக்கூடிய ஆரம்ப சுகாதார நிலையங்களில் செவிலியர்கள், லேப் டெக்னீஷியன்கள், அலுவலக உதவியாளர், கணக்கு அலுவலர், மனநல மருத்துவர், சமூகப் பணியாளர்கள் ஆகிய இடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இப்பணிக்கானத் தகுதிகள் மற்றும் இதர விபரங்களை இங்கேத் தெரிந்துக்கொள்வோம்..


சென்னை மாநகராட்சியின் கீழ் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிவதற்கானத் தகுதிகள்:


காலிப்பணியிடங்கள் :


செவிலியர்கள் -25


லேப் டெக்னீஷியன்- 5


அலுவலக உதவியாளர்- 5


கணக்கு அலுவலர்- 1


மனநல மருத்துவர்- 1


சமூக பணியாளர்கள் – 1


டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் - 4


கல்வித்தகுதி: பணியிடங்களுக்கு ஏற்றவாறு சம்பந்தப்பட்டத்துறைகளில் டிப்ளமோ அல்லது பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்


சம்பளம் – தகுதியின் அடிப்படையில் பல்வேறு பணிகளுக்கு ரூபாய் 10 ஆயிரம் முதல் 47 ஆயிரம் வரை சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


பணிக்கான நிபந்தனைகள்:


சென்னை மாநகராட்சியின் கீழ் உள்ள ஆரம்ப சுகாதாரநிலையங்களில் விண்ணப்பிக்கும் நபர்கள் இப்பணி தற்காலிகமானது என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். மேலும் எந்த காலத்திலும் பணி நிரந்தரம் கிடையாது.


மேலும் தற்காலிக அடிப்படையில் 11 மாதங்கள் மட்டும் பணியமர்த்தப்படுவார்கள். 


விண்ணப்பிக்கும் முறை:


சென்னை மாநகராட்சியின் கீழ் செயல்பட்டுவரக்கூடிய ஆரம்ப சுகாதார நிலையத்தில் மேற்கண்ட நிபந்தனைகளின் பேரில் விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் உங்களது கல்வித்தகுதி, சுய விபரம் அடங்கிய விண்ணப்பங்களை gcchealthhr@chennaicorporation.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அக்டோபர் 7 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதோடு விண்ணப்பத்தில் கல்விச்சான்றிதழ், சமீபத்தில் எடுத்தப்புகைப்படங்கள், முன் பணிபுரிந்த பணி அனுபவம் ஆகியவற்றையும் விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்.


மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள்  அஞ்சல் மூலமாக அனுப்பி வைக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:


Office of the Member Secretary,


CCUHM/City Health Officer,


Public Health Department, Greater Chennai Corporation,


 Rippon Buildings,


Chennai -3


மேலும் இதுக்குறித்த கூடுதல் விபரங்களை https://chennaicorporation.gov.in/gcc/Rect/NUHM_NOTICE_APPLICATION.pdf என்ற இணையதளப்பக்கத்தின் மூலம் அறிந்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.