துணை ராணுவப்படைகளில் ஒன்றான அசாம் ரைஃபிள்ஸ் படையில் பணிபுரிவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் தமிழ்நாட்டிற்கு 54 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே  தகுதியும், ஆர்வமும் உள்ள இளைஞர்கள் அக்டோபர் 25-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.


இந்தியத் துணை ராணுவப்படைகளில் மிகவும் பழமையானதானது. அசாம் ரைபிள்ஸ். மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் மேகாலயா மாநிலத்தில் ஷில்லாங் நகரத்தைத் தலைமையிடாகக் கொண்டு இயங்கிவரும்  நிலையில்,  இதில் 63,747 படை வீரர்களும், 45 பட்டாலியன்களும் உள்ளனர். இந்த வீரர்கள் உள் நாட்டுப் பாதுகாப்பு, தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றம் எல்லைப்பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். மேலும் தொலைத்தூரத்தில்  உள்ள எல்லைப்பகுதி மக்களுக்கு மருத்துவ வசதிகள் மற்றும் தொலைத்தொடர்பு வசதிகளைச் செய்து தருகிறது.



குறிப்பாக இந்திய ராணுவத்தில் சேர்ந்து பணிபுரிய வேண்டும் என்று நினைப்பவர்கள் பெரும்பாலும் துணை ராணுவப்படை பணிகளைத் தேர்ந்தெடுக்கின்றனர். அவர்களுக்கேற்றவாறு அவ்வப்போது பல்வேறுத் துறைகளின் கீழ் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகும். இந்நிலையில் தற்போது அசாம் ரைபிள்ஸ் படையில் ரைபிள்மேன், ஹவில்தார், வாரன்ட் ஆபிசர் போன்ற குரூப் பி மற்றும் குரூப் சி போன்ற பிரிவுகளில் காலியாக உள்ள 1230 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில் இதற்கானத் தகுதிகள்? விண்ணப்பிக்கும் முறை குறித்து இங்கே தெரிந்துகொள்வோம்.


 அசாம் ரைபிள்ஸ் ல் டெக்னிக்கல் பணிக்கானத் தகுதிகள் :


காலிப்பணியிடங்கள் :  நாகலாந்து – 105, பீகார் – 91, மிசோரம் – 75, உ.பி – 98, மணிப்பூர் – 74, ஆந்திரா – 64, மஹாராஷ்டிரம் -61,  தமிழ்நாடு -54, ஜார்க்கண்ட் -51,  மேற்கு வங்காளம் – 50, புதுச்சேரி - 03


கல்வித்தகுதி : ஒவ்வொரு துறைக்கும் தனித்தனியாக தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஐடிஐ, டிப்ளமோ, பட்டம் படித்தவர்கள் சம்பந்தப்பட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


வயது வரம்பு – ஒவ்வொரு துறைக்கும் வெவ்வேறு வயது வரம்புகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக 18- 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.


விண்ணப்பிக்கும் முறை :


மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமும், தகுதியும் உள்ள நபர்கள் ஆன்லைன் வாயிலாக அக்டோபர் 25-ஆம் தேதிக்குள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.


முதலில் www.c.gov.in என்ற இணையதளப்பக்கத்தில் உள்ள அறிவிப்பை முழுமையாக படிக்க வேண்டும்.


பின்னர் அப்பக்கத்தில் உள்ள விண்ணப்படிவத்தைத் தேர்வு செய்து, அதில் கேட்கப்பட்டுள்ள  அனைத்து விபரங்களையும் முழுமையாக பூர்த்தி செய்துகொள்ள வேண்டும்.


இதற்கு 200 ரூபாய் விண்ணப்பக்கட்டணமாகவும், பெண்கள், எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினர் கட்டணம் செலுத்த தேவையில்லை.


தேர்வு செய்யப்படும் முறை:


மேற்கண்ட படிநிலைகளின் படி  துணை ராணுவப் பணிகளுக்கு விண்ணப்பித்த நபர்களுக்கு உடல்தகுதித்தேர்வு, திறன் தேர்வு மற்றும் மருத்துவப் பரிசோதனை தேர்வுகள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் கூடுதல் விபரங்களை www.assamrifles.gov.in/DOCS/NEWS/TECH%20TDN என்ற பக்கத்தின் உதவியோடு அறிந்துகொள்ளலாம்.