சுய தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாதாவர்களே இல்லை. ஆனால்,பலருக்கும் இருக்கும் அச்சம் காரணமாக அது நிறைவேறாமல் போய் விடுகிறது. பயம் கடந்து திட்டங்களை முன்னேடுப்பவர்கள் தொழில்முனைவர்களாக வளர்கிறார்கள். அரசும் தொழிமுனைவு சார்ந்த விஷங்களை ஊக்குவித்து வருகிறது. 


உணவு பதப்படுத்தும் தொழில்:


உணவு பதப்படுத்தும் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு மானியத்துடன் கடனுதவிகள் வழங்கப்படுகின்றன. பிரதமரின் உணவுப் பதப்படுத்தும் குறுந்தொழில் நிறுவனங்கள் ஒழுங்குபடுத்தும் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து பயன்பெறலாம் என்று சென்ன மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. 


 உணவுப் பதப்படுத்தல் வகைப்பாட்டின் கீழ் அடங்கும் பழச்சாறு, பழக்கூழ் தயாரித்தல், காய்கறிகள், பழங்கள், மீன் மற்றும் இறால் ஆகியவ்ற்றினால் செய்யப்படும் ஊறுகாய், வற்றல், அரிசி ஆலை, உலா் மாவு மற்றும் இட்லி, தோசைக்கான ஈர மாவு தயாரித்தல், அப்பளம் தயாரித்தல், உணவு எண்ணெய் பிழிதல், இனிப்பு மற்றும் கார வகைத் தின்பண்டங்கள் தயாரித்தல், மரச் செக்கு எண்ணெய், கடலை மிட்டாய், முறுக்கு, பேக்கரி பொருட்கள், சாம்பாா் பொடி, இட்லி பொடி, மசாலா பொருட்கள் தயாரித்தல், பால் பதப்படுத்துதல், தயிா், நெய், பனீா் உள்ளிட்ட பால் பொருட்கள் தயாரித்தல், பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள் தயாரித்தல் போன்ற தொழில்களை செய்யும் குறுந்தொழில் நிறுவனங்களை விரிவாக்கம் மற்றும் மேம்படுத்தவும் இந்த திட்டத்தினை பயன்படுத்தி கொள்ளலாம் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?


புதிதாக தொழில் தொடங்க விருப்பம் உள்ளவர்கள்,  ஏற்கனவே உணவுப்பதப்படுத்தும் தொழில் செய்து வருபவர்கள், சிறு குறு நிறுவனங்கள், சுய உதவி குழுவினர், உழவர் உற்பத்தியாளர் அமைப்பினர், கூட்டுறவு சங்கங்கள் ஆகியோர் இத்திட்டத்தின் மூலம் பயன் பெறலாம். ரூ.1 கோடி வரையிலான திட்டத் தொகை கொண்ட உணவு பதப்படுத்தும் தொழில் திட்டங்கள் இதன் கீழ் உதவி பெறத் தகுதியானவை.


திட்ட விவரம்:


திட்டத் தொகையில் 10 சதவீதம் முதலீட்டாளா் செலுத்த வேண்டும். 90 சதவீதம் வங்கிகளால் பிணையமில்லா கடனாக வழங்கப்படும். அரசு 35 சதவீத மானியம், அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை வழங்கும்.


சுய உதவிக் குழு:


 உணவுப் பதப்படுத்தும் தொழிலில் ஈடுபடும் சுய உதவிக் குழுவினர் ஒவ்வொருவருக்கும் ரூ.40,000 வீதம் தொடக்க நிலை முதலீடாக வழங்கப்படும்.


எப்படி விண்ணப்பிப்பது?


இத்திட்டத்தின் கீழ் பயன் பெற https://pmfme.mofpi.gov.in/ - என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். 


தொடர்ப்புக்கு:


முகவரி: 


 இணை இயக்குநர்,


தொழில் மற்றும் வணிக மண்டல அலுவலகம்,


A-30, சிட்கோ தொழிற்பேட்டை,


கிண்டி,


சென்னை-32 


தொடர்பு எண்:  90030 84478 / 94441 14723


 வார நாட்களில் அலுவலக வேலை நேரத்தில் மேலே குறிப்பிட்டுள்ள எண்ணை தொடர்பு கொண்டு சந்தேகங்களுக்கு விளக்கம் பெறலாம்,.


கவனிக்க:


இந்த திட்டம் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலமாக செயல்படுத்தப்பட்டு வந்தது. இனி மாவட்ட தொழில் மையங்கள் மூலம் செயல்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.