செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்துடன் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது


படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு


படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்துடன் இணைந்து 26.10.2024 அன்று செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டத்திலுள்ள மேல்மருவத்தூர் இலட்சுமி பங்காரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 26.10.2024 அன்று குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன். தலைமையில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.  


கலந்துகொள்ளும் முன்னணி நிறுவனங்கள்


இம்முகாமில் 200-க்கும் மேற்பட்ட முன்னனி தனியார்துறை நிறுவனங்கள் மற்றும் திறன்பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்துகொண்டு சுமார் 50000 பணிக்காலியிடங்களுக்கு நிரப்பிட தங்களுக்கான மனிதவள தேவைக்குரிய நபர்களை, நேர்முகத் தேர்வினை நடத்தி தேர்வு செய்ய உள்ளார்கள். இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்வதற்கு வேலை அளிப்பவர் மற்றும் வேலை நாடுநர்களுக்கு அனுமதி முற்றிலும் இலவசம். 


இளைஞர்கள் செய்யவேண்டியது என்ன?


மேலும் வேலையளிப்பவர் மற்றும் வேலைநாடுநர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிந்து கொள்ளலாம். இவ்வேலைவாய்ப்பு முகாமில் எட்டாம் வகுப்பு, 10ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு பி.இ., ஐடிஐ மற்றும் டிப்ளமோ, செவிலியர்கள், மருந்தாளுனர், ஆய்வக உதவியாளர்கள் போன்ற கல்வித்தகுதி உடைய வேலைநாடுநர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வேலை நாடுபவர்களும் கலந்துகொண்டு வேலைவாய்ப்பினை பெறலாம்.


வயது வரம்பு என்ன ?


வயது வரம்பு 18 முதல் 40 வயது வரை உள்ளவர்கள் தங்களுடைய கல்வி சான்றிதழ்கள் நகல்கள், சுயவிவர குறிப்பு (பயோடேட்டா) மற்றும் பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்துடன் 26.10.2024 சனிக்கிழமை அன்று காலை 09.00 மணி முதல் 3.00 மணி வரை மேல்மருவத்தூர் இலட்சுமி பங்காரு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு நேரில் வந்து வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு வேலைவாய்ப்பினை பெறலாம்.


தொடர்பு கொள்ள வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும் ?


 இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் பணிநியமனம் பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. மேலும் முகாம் தொடர்பான விவரங்களுக்கு 044-27426020 மற்றும் 6383460933 / 8056789359 என்ற எண்களில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் அருண்ராஜ், தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.