தமிழக கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க லிமிடெட் என்றழைக்கப்பாடும் (Tamil Nadu Cooperative Milk Producers Federation Limited) ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள கால்நடை ஆலோசகர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. திருப்பூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள காலி பணியிடங்கள் இந்த அறிவிப்பின் மூலம் நிரப்பப்பட உள்ளன.
பணி விவரம்:
கால்நடை ஆலோசகர்
பணி இடம்:
திருப்பூர் - 8 பணியிடங்கள்
ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர் ஆகியவற்றை உள்ளடக்கிய மாவட்டத்தில் - 1 பணியிடம்
கல்வித் தகுதி:
அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து பி.எஸ்.சி., கால்நடை படிப்பு ( Bachelor of Veterinary and Animal Husbandry) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கம்யூட்டர் பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமத்துடன் இரு சக்கர வாகனம் வைத்திருக்க வேண்டும்
வயது வரம்பு:
அதிகபட்ச வயது வரம்பு பற்றி அறிவிப்பில் ஏதும் குறிப்பிடப்படவில்லை.
ஊதிய விவரம்:
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை , திருப்பூர் மாவட்டங்களை உள்ளடக்கிய மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க லிமிடெட் நிறுவனத்தில் கால்நடை ஆலோசகர் பணிக்கு மாத ஊதியமாக தேர்வு செய்யப்படுவோருக்கு மாதம் ரூ.43,000 வழங்கப்படும். (ரூ.30,000 + போக்குவரத்து செலவு - ரூ.8,000 + Incentives - ரூ.5,000)
தேர்வு செய்யப்படும் முறை:
நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.
வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களுக்கு நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள் : 07.12.2022 காலை 11 மணி முதல்
நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம்:
வேலூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் யூனியன் லிமிடெட்,
வேலூர்-9
திருப்பூர் ஆவின்:
நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள் :14.12.2022 காலை 11 மணி முதல்
நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம்:
வேலூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் யூனியன் லிமிடெட்,
வீரப்பாண்டி பிரிவு,
பல்லடம் சாலை
திருப்பூர்-641 605
நேர்முகத் தேர்வுக்கு வருபவர்கள் தங்களது தேவையான அனைத்து அசல் மற்றும் சான்றிதழ்கள் கொண்டு வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்ட ஆவின் வேலைவாய்ப்பு அறிவிப்பின் விவரம் அறிய https://cdn.s3waas.gov.in/s3d1f255a373a3cef72e03aa9d980c7eca/uploads/2022/11/2022112379-1.pdf என்ற லிங்கை கிளிக் செய்யும்.
மேலும் வாசிக்க..
DMK: "பேராசிரியர் நூற்றாண்டு விழா; தமிழ்நாடு முழுவதும் 100 சிறப்பு கூட்டங்கள்" - தி.மு.க. தீர்மானம்